மேலும் அறிய

Jobs: இளைஞர்களே! செங்கல்பட்டில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - எப்பொழுது தெரியுமா?

Chengalpattu Job: செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் மாதம் 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் மாதம் 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக் கிழமை 21.06.2024 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

அனுமதி இலவசம் 

இம்முகாமில் கலந்து கொள்வதற்கு வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.06.2024 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு  நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு  044-27426020 மற்றும் 9486870577 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!

TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?

அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?

Rashmika Mandana:
Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை

Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?

Embed widget