Jobs : டிகிரி முடித்தவர்களின் கவனத்திற்கு..மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!
இந்த நிறுவனம் உலக அளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டிட வடிவமைப்பு உள்ளிட்ட பலவற்றில் ஆலோசனை வழங்கி வருகிறது.
இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இஞ்சினியரிங் கண்சல்டண்ட் இந்தியா என்றழைக்கப்படும் மினி ரத்னா நிறுவனத்தில் (Broadcast Engineering Consultants India Limited (BECIL) ) உதவியாளர், ஜூனியர் அட்மின் அலுவலர், உதவி ஸ்டோர்ஸ் அதிகாரி, |பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 29-ஆம் தேதிவரை(நாளை மறுநாள்)கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக அளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டிட வடிவமைப்பு உள்ளிட்ட பலவற்றில் ஆலோசனை வழங்கி வருகிறது.
பணி விவரம்:
Upper Division Clerk – 2
Data Entry Operator – 1
Store Keeper – 2
Cashier – 1
Accounts Assistant – 1
Junior Admin Officer – 2
Junior Accounts Officer – 1
Assistant Stores Officer – 2
கல்வித் தகுதி:
Upper Division Clerk:
இந்தப் பணி எதாவதொரு இளங்கலை பட்டம் முடிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் இருப்பது அவசியம். தட்டச்சு பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். தகவல்களை பதிவு செய்தில் அதிவேகத்தில் செயல்பட கூடியவராக இருக்க வேண்டும். பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
Store Keeper:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Cashier:
வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Tally-குறித்து நன்கறிந்தவாராக இருக்க வேண்டும்.
Accounts Assistant:
வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Tally-குறித்து நன்கறிந்தவாராக இருக்க வேண்டும்.
Junior Admin Officer:
இளங்கலை பட்டம் முடித்திருந்தால் போதுமானது.
Junior Accounts Officer:
வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டய கணக்காயர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்கு வழக்குகள் துறையில் மூன்றாண்டு பணி அனுபவம் அவசியம்.
Assistant Stores Officer:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மருந்து பொருட்கள் சார்ந்த துறையில் பணி செய்ய வேண்டும்.
ஊதிய விவரம்:
Upper Division Clerk:ரூ.19,308
Data Entry Operator / Store Keeper / Cashier / Accounts Assistant: .ரூ.17,752
Junior Admin Officer / Junior Accounts Officer / Assistant Stores Officer:ரூ.33,481
வயது வரம்பு:
Upper Division Clerk / Data Entry Operator / Store Keeper / Cashier / Accounts Assistant ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Junior Admin Officer / Jr. Executives /Executive Assistant / Assistant Stores Officer உள்ளிட்ட பணிகளுக்கு 21 வயது முதல் 45 வயதுவரை உள்ளவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
இந்தப் பணிக்கு www.becil.com அல்லது https://becilregistration.com என்ற லிங்கை கிளிக் செய்ய பாஸ்போர்ட் ஃபோட்டோ, கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினால் அவ்வளவுதான்.
விண்ணப்ப கட்டணம்:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.750, பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.450 விண்னப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகையை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. மற்றும் ஆன்லைன் கட்டணம் உண்டு.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED
(A Government of India Enterprise under Ministry of Information & Broadcasting)
(A Mini Ratna Company)
Head Office: 14-B, Ring Road,
I.P. Estate, New Delhi-110002,
Phone: 011-23378823
Corporate Office:
BECIL Bhawan, C-56/A-17,
Sector-62, Noida-201307
Phone: 0120-4177850 / 4177860
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி : www.becil.com
விண்ணப்பிக்க கடைசி தேதி- 29.09.2022
கூடுதல் தகவலுக்கு அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.becil.com/uploads/vacancy/997be2965d53aba874dc35e511adf4b8.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.