Bharathidasan University: முதுகலை பட்டம் பெற்றவரா? பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி செய்ய வாய்ப்பு! விவரம்!
Bharathidasan University: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள கள ஆய்வாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
கள ஆய்வாளர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க Psychology / Sociology / Social Work ஆகிய படிப்பிகளில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆராய்ச்சி பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். கள ஆய்வில் ஈடுபட்டு அதனடிப்படையில் தரவுகள் சேகரிக்க வேண்டும்.
கரூர், தேனி,சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட ஊர்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊதிய விவரம்
இதற்கு மாதம் 12,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
vinothkumarmei@buc.edu.in - என்ற மின்னஞ்சல் முகவரியில் சுயவிவர குறிப்புடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.02.2023
https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2024/psychology/Filed%20Investigators%20-%205%20Nos%20-%20Notification.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு வரும் 13-ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
பணி விவரம்
நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர்
பணி இடம்
திண்டுக்கல்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். இரண்டு/ நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது வரம்பு பற்றி அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (அடிப்படை ஊதியம் - ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி - 13-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
நேரடி தேர்வு நடைபெறும் இடம்:
No.9, கிழக்கு கோவிந்தபுரம்
திண்டுக்கல் - 624 001
நேர்காணல் நடைபெறும் நாள்: 13.02.2024 / 11 மணி முதல்..
ரயில்வே துறை வேலைவாய்ப்பு
தெற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, பாலக்காடு, திருவனந்ததபுரம், சேலம் உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களில் உள்ள அலுவலகங்களில் Scouts & Guides இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி
- இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னிக்கல் பிரிவு வேலைக்கு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- லெவல் -1 பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 38 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
மாத ஊதிய விவரம்
எழுத்துத் தேர்வு விவரம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20,2024
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://iroams.com/rrc_sr_scout/pdfs/400_477831.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.