UPSC Free Coaching For Women: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மகளிர் கவனத்திற்கு; இலவச பயிற்சி வகுப்பு! விவரம்!
UPSC Free Coaching for Women: ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுக்கு தயாராகும் மகளிருக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த விவரம்.
குடிமைப் பணி தேர்வுகளுக்கு (The Union Public Service Commission - UPSC (civil services) examination (IAS, IFS,IPA ) அதாவது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆகியவற்றிற்கு தயாராகும் மகளிருக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து தமிழ்நாடு அரசின் மாநில கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து குடிமைப் பணி தேர்வுகளில் பங்கேற்கும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசப் பயிற்சி திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:
இராணி மேரி கல்லூரி, சென்னை
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கல்வித் தகுதி:
இளங்கலை பட்டம் பெற்ற பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
14.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராவும். 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு / விண்ணப்பதாரங்களுக்கு 5 ஆண்டுகள் வயது வர்மப்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 வயது வரை.
பிறப்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 3 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 35 வவயது.
ராணிமேரி கல்லூரி அல்லது மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள் நடைபெறும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த சிறப்பு பயிற்சி திட்டத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் விண்ணப்பதாரர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இராணி மேரி கல்லூரி, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வரும் 24ம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் A4 அளவுள்ள தாளில் மட்டுமே இருக்க வேண்டும். சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், தேசிய வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ. 200 வரைவோலை (Demand Draft) உடன் கல்லூரி நிர்வாக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப தபால் அட்டையில், CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTERANCE EXAMINATION” என்று குறிப்பிட வேண்டும். வரைவோலையின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், முகவரி எழுதியிருக்க வேண்டும்.
தகுதித் தேர்வில் கேட்கப்படும் பாடத் திட்டஙக்ள்:
இந்திய வரலாறு
புவியியல்
பொது நிர்வாகம்
வணிகவியல்
பொது அறிவு
பொது ஆங்கிலம்
பொது அறிவியல்
நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்:
இராணி மேரி கல்லூரி, சென்னை - 01.12.2022/ வியாழன் - காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை
மீனாட்சி மகளிர் கல்லூரி,மதுரை - 01.12.2022/ வியாழன் - காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை
முகவரி:
Sri Meenakshi government college for women (Autonomous),