எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதும்.. அரசு மருத்துவமனையில் பணிவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Thoothukudi Medical College Hospital: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சலவையாளர் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
சமையலர் மற்றும் சலவையாளர் பணி
தேவையான தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணபிக்க தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்:
இந்த பணியிடங்களுக்கு நிலை-1 அடிப்படையில், ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முழு விவரம்:
சுழற்சி முறை: 1 - சமையலர் காலிப்பணியிடங்கள் -5
ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority - Arunthahiyar Women / Destitue Widow - | Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர் MBC/DNC General Priority | Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் BC (other than BC Muslim) General Priority - 1 Post பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - 1 Post ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC General Priority| Post
சுழற்சி முறை: 11 - சலவையாளர் காலிப்பணியிடங்கள் - 6 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority Arunthahiyar Women / Destitue Widow - 1Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர். MBC/DNC General Priority - 1Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் BC (other than BC Muslim) General Priority - IPost பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - Post ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC General Priority - IPost மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர் (MBC/DNC Non Priority (Women / Destitue Widow) | Post) ஊதிய விகிதம் நிலை-1 (ரூ.15700 58100). கல்வித் தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.01.2022 அன்று SC/ST - 18-37.MBC/BC OC - 18-32, மாற்றுத்திறனாளி- 42 வயது வரை
குறிப்பு: முன்னுரிமை அடிப்படையிலான (Priority) காலிப்பணியிடங்களுக்கான (அரசாணை (நிலை) எண்.122/மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை, நாள்.02.11.2021)ல் அறிவுறுத்தியபடி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி
எப்படி விண்ணப்பிப்பது?
சுய விவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை அஞ்சல் அனுப்பலாம் அல்லது நேரிலோ சென்று வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசிநாள்: 30.09.2022 மாலை 5 மணிக்குள்..
மேலும் வாசிக்க..
Actress Samantha: அரிய வகை தோல் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளாரா? ... உண்மையை சொன்ன மேனேஜர்