மேலும் அறிய

Omni Bus Reservation : வருகிறது தீபாவளி.. கட்டணங்களை நிர்ணயித்த ஆம்னி பேருந்து சங்கம்..! இதோ முழு விவரம்..

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கான கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து சங்கம் நிர்ணயித்துள்ளது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கான கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து சங்கம் நிர்ணயித்துள்ளது. www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவும் ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “ கொரோனா தொற்றுக்கு முன் தமிழகத்தில் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் மற்றும் சுற்றுலாவிற்கும் மொத்தம் 4000 ஆம்னி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன.கொரோனா தொற்றுக்குப் பின் தற்பொழுது தமிழகத்தில் 1500 பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன.

ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை  Non AC Seater, AC Seater , Non AC Sleeper, AC Sleeper , Premium Sleeper , Volvo/Scania Multiaxle Seater , Volvo/Scania Multiaxle Sleeper என ஏழு வகையான பேருந்துகள் உள்ளன. இவ்வாறு இயங்கும் பேருந்துகளில் முதலீடு மற்றும் இயக்குவதற்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகள் 40 லட்சத்திலிருந்து மல்டி வால்வோ போன்ற சொகுசுப் பேருந்துகள் ஒரு கோடியே 70 லட்சம் வரை உள்ளன. ஆகையால் ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை.

இன்று உலக அரங்கில் இந்தியா போன்று பல்வேறு நாடுகளில் போக்குவரத்துறையில் கட்டணம் நிர்ணயம் என்பது விமானம், ரயில், பேருந்து ஆகிய வகையான போக்குவரத்திற்கு டைனமிக் மென்பொருள் மூலமாக தேவைகள் குறைவாக உள்ள பொழுது குறைந்த அளவு கட்டணமும் தேவைகள் அதிகமாக உள்ள பொழுது அதிக அளவு கட்டணமும் மென்பொருள் மூலமாகவே நிர்ணயிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தின் சராசரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இன்று இந்தியாவைப் பொறுத்தவரை விமானம், ரயில் மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்திற்கும் இந்த முறையே கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் விமான போக்குவரத்தை பயன்படுத்த இயலாத பெருவாரியான பயணிகள் தங்கள் பயணத் திட்டத்திற்கு ஆம்னி பேருந்துகளையே நாடுகின்றனர் ஏனென்றால் ஆம்னி பேருந்துகளில் அவர்கள் விரும்பும் சொகுசு வசதிகள் உள்ளன. 

ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை பயணிகளே பார்த்து அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்து பயணிக்கிறார்கள். அதனால் பயணிகள் விருப்பம் இல்லாமல் பயணிப்பதில்லை. அதனால் எந்தப் பயணிகளும் ஏமாற்றப்படுவதும் இல்லை.

இருந்த போதிலும் அரசுக்கும் இந்தத் தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளோம். இந்தக் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற வெப்சைட் முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்திற்கு அதிகமாக வசூலிக்கும் உரிமையாளர்களை போக்குவரத்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனிவரும் விழா காலங்களில் இந்தக் கட்டணங்களுக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்க அனைத்து உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த விழா காலங்களிலும் போக்குவரத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இதற்கு அதிகமான கட்டணம் வசூலித்த பேருந்துகளை போக்குவரத்துறை அதிகாரி மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என தெரிவித்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget