Anna University Recruitment: பொறியியல், பிடெக் பட்டம் பெற்றவரா? அண்ணா பல்கலை.யில் வேலை- விவரம்!
Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணபிக்கும் வழிமுறைகள் பற்றி காணலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜக்ட் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
திட்ட உதவியாளர் (Project Assistant I, II)
கிண்டியில் உள்ள AU- FRG INSTITUTE FOR CAD/ CAM துறையில் இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி:
Manufacturing, தெர்மல் ஆகிய துறைகளில் முதுகலை பொறியியல் பட்டம், எம்.டெக். படித்தவர்கள் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.டெக். தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
CAD சாஃப்ட்வேர், FEA, CFD, CNC ஆகிய ப்ராம்கிராம் துறைகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
திட்ட உதவியாளர் - I - ரூ.18,000/-
திட்ட உதவியாளர்- II - ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
https://www.annauniv.edu/pdf/AUFRG_Professional_Assistant_I_II.pdf - என்ற இணைப்பை க்ளின் செய்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
aufrgicc@gmail.com - என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
The Director, AU-FRG Institute for CAD/CAM,
Anna University, CEG Campus, Chennai – 600025
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.07.2024 17.30 மணி வரை
விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய, வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/AUFRG_Professional_Assistant_I_II.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க.
TANGEDCO: டிப்ளமோ படித்தவரா? ’டான்செட்கோ’வில் தொழில் பழகுநர் பயிற்சி - முழு விவரம்!