மேலும் அறிய

Agnipath Recruitment: அக்னிபத் திட்டத்தில் ராணுவப் பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம்! - விவரம்!

Indian Army: அக்னிபத் திட்டத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ பணிகளில் சேர மார்ச்22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான தகுதித் தேர்வு  (AGNIVEER GENERAL DUTY (WOMEN MILITARY POLICE)) நடைபெறவுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு திருமணமாகாத பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்: 

அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி 

கல்வித் தகுதி: 

  • அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு. 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 17 -1/2 முதல் 21 வயது வரை இருக்க வேண்டும்.

ஆண்டு ஊதியம் பிடித்தம் போக கைக்குக் கிடைப்பது  வீரர்களிடம் பிடித்தம் செய்வது அரசு செலுத்துவது
முதல் ஆண்டு - ரூ.30,000  ரூ.21,000 ரூ.9000 ரூ.9000
2 ஆம் ஆண்டு- ரூ.33,000 ரூ.23,100 ரூ.9,900 ரூ.9,900
3 ஆம் ஆண்டு- ரூ.36,500 ரூ.25,580 ரூ.10,950 ரூ.10,950
4 ஆம் ஆண்டு- ரூ.40,000 ரூ.28,000 ரூ.12,000 ரூ.12,000
  மொத்தம் ரூ.5.02 லட்சம் ரூ.5.02 லட்சம்

அக்னி வீரர்களின் நிதியும், மத்திய அரசு நிதியும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் அளிக்கப்படும். 

பிற பயன்கள்

பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உளது.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Computer Based Written Examination (Online CEE))
மற்றும் ஆட்சேர்ப்பு முகாம் (Recruitment Rally) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். உடற் தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவைகளுடன் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் போர்ட்டல் மாற்றும் யூ.பி.ஐ. (UPI) மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 22-அன்றுடன் முடிவடைகிறது.

ஹால்டிக்கெட்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் மேலதிக தகவல் குறித்த அப்டேட்களை செக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) ( 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.03.2024

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 22.04.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு - https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/ZRO_CHENNAI_NOTIFICATION_AGNIVEER_GD_WMP_24-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget