மேலும் அறிய

8ம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. மாதம் ரூ.8 ஆயிரம்..! அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு

தொழிற்‌ பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையாக குறைந்தபட்சம்‌ ரூ.8000 வழங்கப்பட உள்ளது.

ஐ.டி.ஐ. படித்த தொழில் பழகுநர்களுக்கு மாதாமாதம் குறைந்தபட்சம் 8 ஆயிரம் உதவித் தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைப் பெறுவது எப்படி? என்ன தகுதி தேவை? பார்க்கலாம்.

தமிழக அரசு சார்பில் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழிற்‌ பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையாக குறைந்தபட்சம்‌ ரூ.8000 வழங்கப்பட உள்ளது.

எப்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது?

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி முகாம்‌ வருகிற 11.11.2024 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகம்‌, சென்னை மற்றும்‌ இந்திய அரசு, தென்மண்டல திறன்‌ மேம்பாடு மற்றும்‌ தொழில்‌ முனைவு இயக்ககம்‌ இணைந்து இதை நடத்துவதாக சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஐகடே தெரிவித்துள்ளார்‌.

 இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகம்‌, சென்னை மற்றும்‌ இந்திய அரசு, தென்மண்டல திறன்‌ மேம்பாடு மற்றும்‌ தொழில்‌ முனைவு இயக்ககம்‌ இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி முகாம்‌ நடத்த உள்ளது.

பல்வேறு தொழிற்‌ பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்‌ பழகுநர்‌ முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 11.11.2024 அன்று காலை 9.00 மணியளவில்‌ ஆர்‌.கே.நகர்‌, அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலையத்தில்‌ (வட சென்னை அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய வளாகத்தில்‌) நடைபெற உள்ளது.

8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

இதில்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ தொழிற்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ 8, 10, 12 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்‌ பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்‌.

மாதாந்திர உதவித்‌தொகை ரூ.8000

தற்போது தொழிற்‌ பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையாக குறைந்த பட்சம்‌ ரூ.8000/- மற்றும்‌ தேசிய தொழிற்‌ பழகுநர்‌ சான்றிதழ்‌  (National Apprenticeship Certificate) வழங்கப்படும்‌.

முகாமில் கலந்துகொள்வது எப்படி?

 இதுவரை தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார்‌ தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in என்னும் இணையதள முகவரியில்‌ பதிவு செய்ய வேண்டும்.

எனினும், அசல்‌ கல்வி சான்றிதழ்களுடன்‌ இந்த முகாமில்‌ கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்‌ கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: www.apprenticeshipindia.gov.in 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget