ஜிப்மர் மருத்துவமனையில் 454 வேலைவாய்ப்பு: நர்சிங் பணிக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனையில் 446 பணியிடங்களும், ஏனாம் ஜிப்மர் கிளைக்கு 8 இடங்களும் என மொத்தம் 454 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனையில் 446 பணியிடங்களும், ஏனாம் ஜிப்மர் கிளைக்கு 8 இடங்களும் என மொத்தம் 454 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஜிப்மர் மருத்துவமனையில் 454 நர்சிங் அதிகாரி பணிக்கான அறிவிப்பு
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) இந்தியாவின் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு மருத்துவப் பள்ளியாகும். ஜிப்மர் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு பரிந்துரை மருத்துவமனையாகும். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, அதன் உள் நிர்வாகத்தை நடத்துவதற்கு சுயாட்சியுடன் உள்ளது. இது சிறந்த மருத்துவ சேவை வழங்கி வருவதால் தேசிய அளவில் மிகவும் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பணியிடங்கள் விவரம்
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனையில் 446 பணியிடங்களும், ஏனாம் ஜிப்மர் கிளைக்கு 8 இடங்களும் என மொத்தம் 454 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தேர்வு முறை
நர்சிங் அதிகாரி பணிகள், தகுதி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். B.SC (Hons) நர்சிங், B.SC நர்சிங் படிப்புகள் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் (www.aiimsexams.ac.in) மூலம் விண்ணப்பங்களை ஆகஸ்டு 11-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தவறான தகவல் ஏதும் கண்டறியப்பட்டால் உடனடியாக விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஆன்லைன் மூலமாக முதல்நிலைத்தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதியும், மெயின் தேர்வு செப்டம்பர் 27-ந்தேதியும் நடைபெற உள்ளது. இந்த தகவலை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.





















