’உன் வலியை நான் முழுதாக உணர்கிறேன்!’ - உலக மனநல நாள் இன்று!
உடல்நலனைப் போல மனநலனும் மிகமிக முக்கியமானது. காய்ச்சல் போல அதனைச் சட்டெனக் கண்டுபிடித்துவிட முடியாது.அதனாலேயே மனநலன் மீது அதீத அக்கறை செலுத்தவேண்டியிருக்கிறது
ஒவ்வொரு வருடமும் 10 அக்டோபர்’21 உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனநலன் பற்றி மக்களுக்கு அறிவுரை ஏற்படுத்தவும் அதுகுறித்த மூடநம்பிக்கைகளக் களையவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
முதன்முதலில் 1992ல்தான் இந்த நாள் உலக மனநலக் கூட்டமைப்பு என்னும் சர்வதேச மனநல அமைப்பால் அனுசரிக்கப்பட்டது.
உலக மனநல தினத்தின் இந்த வருடத்துக்கான தீம் என்ன தெரியுமா? ‘’சமநிலையற்ற உலகத்தின் மனநலன்('Mental Health in an Unequal World')’’
உடல்நலனைப் போல மனநலனும் மிகமிக முக்கியமானது. காய்ச்சல் போல அதனைச் சட்டெனக் கண்டுபிடித்துவிட முடியாது.அதனாலேயே மனநலன் மீது அதீத அக்கறை செலுத்தவேண்டியிருக்கிறது.’எனக்கு மனதளவில் இந்தப் பிரச்னை உள்ளது’ என எல்லோராலும் வெளிப்படையாகக் கூற முடிவதில்லை. சிலருக்கு தனக்கு மனம் சார்ந்த பிரச்னை உள்ளது என்பதே தெரியாது. ஆனால் மனநலன் குறித்து வெளிப்படையாக தைரியமாகப் பேசிய சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
’என்னை நம்பு! உன் வலியை நான் முழுதாக உணர்கிறேன். தனது வாழ்நாளின் இருண்டகாலத்திலிருந்து மீண்டு மகிழ்ச்சியான தான் நினைத்ததைச் செய்யும் வாழ்வை வாழும் சிலரை நான் பார்த்திருக்கிறேன். உன்னாலும் அது முடியும். உன்னை நான் நம்புகிறேன். நீ நிச்சயம் ஒரு சுமையல்ல.நீ எப்போதுமே யாருக்கும் சுமையல்ல’ - சோஃபி டர்னர்
’மனநலன் குறித்த எனது அனுபவம் என்ன தெரியுமா? உங்கள் மனநலனைப் பற்றியும் அதுசார்ந்த போராட்டத்தைப் பற்றியும் நாம் பேசத் தொடங்கினால்தான் நம்மைப் போன்ற ஒரு பெருங்கூட்டமே உள்ளது என்பது தெரியும்’ - இளவரசர் ஹாரி
‘இனி எதுவுமே இல்லை என உங்கள் மூளை உங்களுக்குச் சொன்னாலும். நம்பிக்கை மட்டும் எப்போதும் மிச்சமிருக்கும்’ - ஜான் க்ரீன்
’நீங்கள் நினைப்பதை விட இந்த உலகத்துக்கு நீங்கள் விலைமதிப்பற்றவர்கள்’ - லில்லி ரெய்ன்ஹார்ட்
’எனது இருண்டகாலம்தான் என்னை வலுவாக்கியது. ஒருவேளை நான் ஏற்கெனவே வலுவானவள்தான்.இந்த இருண்டகாலம் அதனை நிரூபிக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது என்பேன்’ - எமெரி லார்ட்
’சில நேரங்களில் மனிதர்களுக்கு நீங்கள் கடந்து வந்த பாதை புரியாமல் போகலாம். அவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அது அவர்கள் பயணிக்கும் பாதை இல்லை’ - ஜோபெர்ட் போத்தா
நீங்கள் எப்போதும் உங்களை நேர்மறையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சோகம், கோபம், எரிச்சல், பயம், அயர்ச்சி அத்தனையும் எதிர்மறை எண்ணங்கள் இல்லை அவை உங்கள் உணர்வுகள். நீங்கள் மனிதர்கள் என நிரூபிக்கும் உணர்வுகள் - லோரி டெஷ்ன்
’என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நான் முன் நகர்ந்துகொண்டிருக்கிறேன். நான் நல்ல ஜீவன் நல்ல வாழ்க்கைக்குத் தகுதியானவன் என ஆழ்மனதுக்கு நன்கு தெரியும்’ - ஜோனதான் ஹார்னிஷ்
‘சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே இந்த நாள் நமக்கானதாக இருக்காது என்கிற அயர்ச்சியோடு எழுவீர்கள். ஆனால் உங்கள் உள்மனதின் சிரிப்பு உங்களுக்கு கேட்கிறதா? - அதற்குத் தெரியும் இத்தனை நாட்களும் உங்களுக்கு அதே உணர்வுதான் இருந்துள்ளது ஆனால் இத்தனை நாட்களையும் நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள்’ - சார்லஸ் புகாவ்ஸ்கி
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )