Hypertension: ரத்த அழுத்த அளவுகளை தெரிந்து, உடல் நலத்தை காத்துக் கொள்ளுங்கள் - உலக சுகாதார அமைப்பு
உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக விழுப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே- 17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரத்த அழுத்தம் அளவுகளை தெரிந்து,உடல் நலத்தை காத்துக் கொள்ளுங்கள் - உலக சுகாதார அமைப்பு
உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக விழுப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே- 17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக உயர் ரத்த தினம்:
ரத்த அழுத்தம் தொடர்பாக விழுப்புணர்வு ஏறபடுத்தும் விதமாக, உலக சுகாதார நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு உலகளாவிய பிரசாரத்தை தொடங்கியது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் விதமாக மே-17ஆம் தேதியை உயர் ரத்த அழுத்த தினமாக உலக சுகாதாரப் அமைப்பு அறிவித்தது.
2022- கருப்பொருள்:
உயர் ரத்த அழுத்த தினத்தையொட்டி, ரத்த அழுத்தம் தொடர்பான கருப்பொருளை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
- ரத்த அழுத்த அளவுகளை அளவிடுங்கள்
- ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்
- நீண்ட நாள் வாழுங்கள்
இது உலகெங்கிலும் குறைந்த விழுப்புணர்வுள்ள மக்களை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள மக்களை அடிப்படையாக, இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அமைந்துள்ளது.
ரத்த அழுத்தம் என்றால் என்ன:
ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் தேவையான அளவை விட அதிகரித்து காணப்படுவதே உயர் ரத்தம் அழுத்தம் என அழைக்கப்படுகிறது. இதை கண்டறிந்து குணப்படுத்துவதை தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். இந்நோய் வெளியே தெரியாது. அதனால் இந்நோயை சைலண்ட் கில்லர் என அழைப்பர்.
ஏற்படுவதற்கான காரணம்:
- பெரும்பாலானோருக்கு எவ்வாறு ரத்தம் அழுத்தம் உண்டாகிற்து என கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது
- சிலருக்கு சிறுநீரகம் பாதிக்கப்படுவதால் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்
- முறையற்ற வாழ்க்கை
- உணவுப்பழக்கம்
ரத்த அழுத்தத்தை தவிர்க்க்:
- உப்பு அதிகமுள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்
- கொழுப்பு அதிகமுள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்
- புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
- மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
- துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்
- மன அமைதிக்கு தியானங்களை மேற்கொள்ளவும்
- மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ளுங்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )