மேலும் அறிய

சென்னை, கோவை, மதுரை.. பெருநகரங்களில் இதய நோய் பாதிப்பு அதிகரிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை..

தமிழ்நாடெங்கிலும் இதய நாள நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

35-50 வயதுப்பிரிவை சேர்ந்த நபர்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற பெரு நகரங்களில் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது.
 
உலக இதய தினம்
 
 மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுசரிக்கப்படும், உலக இதய தினத்தையொட்டி இதயவியல் நிபுணர்கள் செய்தியாளர்களிடம்  தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். ”இளவயது நபர்களிடையே அதிகரித்து காணப்படும் நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், உடற்பருமன் மற்றும் புகையிலை பயன்பாடு ஆகிய காரணிகள் இச்சூழல்நிலையை இன்னும் மோசமாக்கி இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன. தென்னிந்தியா முழுவதிலும் மற்றும் தமிழ்நாடெங்கிலும் இதய நாள நோய் பாதிப்புகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. வாழ்க்கை முறை மாற்றங்கள், அதிக நீரிழிவு விகிதங்கள் மற்றும் முன்கூட்டியே ஏற்படும் மிகை இரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முதன்மை காரணங்களாக இருக்கின்றன”.
 
என்ன செய்ய வேண்டும் - என்ன செய்யக்கூடாது?
 
“இன்றைய அதிவேக உலகில் நீண்டகாலத்திற்கு இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு சமச்சீரான உணவு, தவறாமல் உடற்பயற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றிற்கு இள வயது நபர்கள் கட்டாயமாக முன்னுரிமை அளிக்க வேண்டும். இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் மதுபானம் ஆகியவற்றை மிகவும் கட்டுப்படுத்துவதோடு, பழங்கள், காய்கறிகள், முழு தானிங்கள் மற்றும் கொழுப்பற்ற புரதங்கள் ஆகியவை அடங்கிய உணவுப் பொருட்களை உட்கொள்வது உள்ளடங்கும். தவறாமல் உடற்பயற்சி, தியானம் மற்றும் யோகா போன்ற மன அழுத்த மேலாண்மை உத்திகள், புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, ஒவ்வொரு நாள் இரவிலும் 7-9 மணி நேர உறக்கம், போதுமான அளவு நீர் அருந்துவது மற்றும் குறித்த கால அளவுகளில் உடல்நல பரிசோதனைகளை செய்துகொள்வது ஆகிய நடவடிக்கைகளும் அத்தியாவசியமானவை” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
 
பரிசோதனை முறை
 
செய்ய வேண்டிய முக்கியமான உடல்நல பரிசோதனைகளில், இரத்த அழுத்த சோதனைகள், கொழுப்பு அளவிற்கான மதிப்பாய்வுகள், இரத்தச் சர்க்கரை சோதனைகள், பிஎம்ஐ அளவீடுகள், ஈசிஜி மற்றும் இதய அழுத்த சோதனைகள் ஆகியவையும் உள்ளடங்கும். “இதய நாள நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது மற்றும் மேம்பட்ட சிகிச்சை விளைவுகளை அடைவதற்கு இந்த ஸ்கிரீனிங் சோதனைகள் மிக முக்கியமானவை,” என்று இம்மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
 
நவீன சிகிச்சைகள்
 
 இதய நாள நோய்களுக்கான சிகிச்சையில் பல புதிய முன்னேற்றங்கள் நிகழ்ந்திருப்பதையும் இந்நிபுணர்கள் கோடிட்டுக் காட்டினர். “ரோபோ உதவியுடன் புதிய அறுவைசிகிச்சை, 3டி இமேஜிங் சோதனை மற்றும் ஆக்மென்டன்ட் உட்பட நவீன இமேஜிங் கருவிகள் போன்ற தொழில்நுட்பகள் துல்லியமான இடையீட்டு சிகிச்சை நடவடிக்கைகள் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை செயல்படுத்த உதவுகின்றன. அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் தொலை மருத்துவம் போன்றவையும் இதய நோய் கண்காணிப்பு மற்றும் மேலாண்மையை புரட்சிகரமானதாக மாற்றியிருக்கின்றன மற்றும் சிகிச்சைக்கு பெரிய அளவிலான அணுகுவசதியை உறுதிசெய்திருக்கின்றன. உலக இதய தின அனுசரிப்பையொட்டி மக்கள் மத்தியில் இதய ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை பரப்புவதற்கு பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கியிருக்கிறது” என்றும் தெரிவித்தனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget