Health Tips: உங்கள் மாதவிடாய் இலகுவானதாக இருக்க...சில டிப்ஸ்!
நல்ல சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் பெண்கள் சுத்தமாகவும் மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்தவும் முடியும். அறிவுறுத்தப்பட்ட மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிப்பது முதன்மையானதாக இருக்க வேண்டும்.
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தில் முக்கியமான சுழற்சிகளில் ஒன்றாகும். மாதவிடாய் சுகாதாரம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. நல்ல சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் பெண்கள் சுத்தமாகவும் மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்தவும் முடியும். அறிவுறுத்தப்பட்ட மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிப்பது முதன்மையானதாக இருக்க வேண்டும்.
மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான பல தவறான கருத்துக்கள் இருப்பதால்,சரியான நடைமுறைகளை அனைவரும் அறிந்திருப்பது அவசியம். இதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கலாம் மாதவிடாய் காலம்தோறும் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் முழுவதும் வசதியாக உணர முடியும்.
மாதவிடாய் சீராக இருக்க உதவும் சில குறிப்புகள்:
மாதவிடாய் சுழற்சியின் போது, பருத்தியில் செய்த சானிட்டரி நாப்கின்கள் அல்லது டம்பான்கள் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் அவை சருமத்தில் ரேஷஸ் ஏற்படாமல் மென்மையாக வைத்திருக்கவும் மேலும் எரிச்சல் அல்லது வெடிப்புகளைத் தவிர்க்கவும் உதவும். மாதவிடாய் சுழற்சியின் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதிக மாதவிடாயை அனுபவிக்கும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் பேட்டில் உள்ள சிலிகான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதில்லை என்பதால் மாதவிடாய் கப்களைப் பயன்படுத்துவதும் ஒரு நல்ல வழி.
பேட்களைப் பயன்படுத்துவது நீர் சுருக்கு போன்ற தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு ஏற்றபடி ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் பிறகு உங்கள் டம்பான்கள் அல்லது பேட்களை மாற்ற மறக்காதீர்கள். உங்கள் பயணத்தின்போது உடன் ஒரு பேட் அல்லது டேம்போன் வைத்திருக்கவும்.
வசதியான பருத்தி உள்ளாடைகளை அணிவது, மாதவிடாய் அயற்சி ஏற்படாமல் தவிர்க்கிறது. உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷஸ் ஏற்பட்டால் அதனை அலட்சியமாக விடாதீர்கள். அந்த சமயங்களில் தளர்வான பருத்தி ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணியவும்.
போதுமான தண்ணீரை அருந்தி உங்களை ஹைட்ரேட்டடாக வைத்திருங்கள். மாதவிடாய் காலங்களில் உங்கள் வயிறு உப்புசமாக உணர்ந்தால் அதற்கு நீர் ஆசுவாசமானதாக இருக்கும்.உப்புசத்தைக் குறைக்கவும் உதவும்.மாதவிடாய் காலத்தில் உடல் செயல்பாடு முக்கியமானது. நடைபயிற்சி யோகா அல்லது மென்மையான உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளித்து, உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருங்கள். கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு அல்லது பேட் மாற்றிய பின், உங்கள் கைகளை கழுவவும். உங்கள் தலைமுடியை முழுமையாக உலர வைக்கவும்.கெமிக்கல் கலந்த பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
பிறப்புறுப்பின் முன்னும் பின்னும் நன்கு கழுவவும். பின்னால் இருந்து முன் துடைப்பதன் மூலம், ஆபத்தான கிருமிகள் பிறப்புறுப்பில் சேர்கிறது இது சிறுநீர் பாதையில் நோய் தொற்றை ஏற்படுத்தும் அதனால் அவ்வாறு துடைப்பதை தவிர்க்கவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )