மேலும் அறிய

Nipah: நிபா கலக்கத்தில் கேரளா.. உஷாராகும் தமிழ்நாடு.. தீவிர கண்காணிப்பில் எல்லைகள்!

எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் வழியாக கேரளாவிலிருந்து பயணிப்பவர்கள் பரிசோதனைக்குப் பிறகே தமிழ்நாட்டினுள் அனுமதிக்கப்படுவதாக மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் 12 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நிபா வைரஸ் வௌவால்கள் மூலமாகவும், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதன் மூலமாகவும் பரவுகிறது. கொரோனா வைரஸ் போன்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு  அதிவேகமாக பரவாவிட்டாலும் தொற்று ஏற்படுத்தக்கூடியது.

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்தார். அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள்  கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 8 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் யாருக்கும் வைரஸ் பாதிப்புகள் இல்லை எனவும் அதே நேரத்தில் வைரசால் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Nipah: நிபா கலக்கத்தில் கேரளா.. உஷாராகும் தமிழ்நாடு.. தீவிர கண்காணிப்பில் எல்லைகள்!

தற்போது, இரண்டாம் கட்டமாக சிறுவனுடன் தொடர்பிலிருந்த 5 பேருக்கு பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு அந்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. 

முன்னதாக, உயிரிழந்த சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலில் சிகிச்சையகத்துக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி என வெவ்வேறு இடங்களுக்கு  சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவ்வாறு சிறுவனுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பிலிருந்த அனைவரையும் கண்டறிவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனுக்கு எப்படி முதன்முதலில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழக கேரள  எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் வழியாக கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் பயணிப்பவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே தமிழ்நாட்டினுள் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் எல்லை மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜிகா வைரஸ் பாதிப்புகளும் உள்ள சூழலில் அதுகுறித்த விழிப்புணர்வையும் வீடு வீடாகச் சென்று மக்களிடையே ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Nipah: நிபா கலக்கத்தில் கேரளா.. உஷாராகும் தமிழ்நாடு.. தீவிர கண்காணிப்பில் எல்லைகள்!

 மேலும், எல்லை மாவட்டங்களில் நடைபெறும் சோதனைகளின்போது உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் மாநிலத்திற்குள் அனுமதிக்காமல் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுப்வதாகவும் கொரோனா நெகட்டிவ் அல்லது கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். 

கேரள மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மட்டுமல்லாது பரவும் நோய்களான ஜிகா, நிபா ஆகியவற்றிற்கும் பரிசோதனை நடத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? - நிபுணர்கள் கூறும் உண்மை!
எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? - நிபுணர்கள் கூறும் உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget