உங்கள் ஹீமோகுளோபின் அளவை கூட்டணுமா: இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நமக்கு ரத்த சோகை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நமக்கு ரத்த சோகை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை அனீமியா எனக் கூறுகின்றனர். சாதாரண ரத்த சோகை தானே என்று அசட்டை செய்தால் மிகக் கொடிய நோய்களைக் கூட வரவேற்பு உடலில் சேர்த்துவிடும். ஆகையால் ரத்த சோகையைப் போக்க உணவின் மூலமே முயற்சிகளை மேற்கொள்ளலாம். அப்படி ரத்த சோகையில் இருந்து அற்புத சுகம் தரும் சில உணவுகளை
உங்களுக்காககப் பட்டியலிடுகிறோம்.
1. உலர் திராட்சை:
ரத்த சோகை இந்தியாவில் அதுவும் குறிப்பாக இந்தியப் பெண்களில் சர்வ சாதாரண நோயாக இருக்கிறது. ஆகையால் ரத்த சோகை இருப்பவர்கள் உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் குறிப்பாக கறுப்பு உலர் திராட்சையை உட்கொள்ளலாம். முந்தைய நாள் இரவே அதை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அதை மிக்ஸரில் அடித்து சாறாக வடிகட்டி தினமும் காலையில் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவில் நல்ல மாற்றம் தெரியும். உலர் திராட்சையில் இரும்புச் சத்துடன் காப்பரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலக் கீரை:
பாலக் கீரை அல்லது அமர்நாத் கீரை என்றழைக்கப்படும் இந்த வகை கீரையில் இரும்புச் சத்து அதிகம். இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் விருத்தி அடையும். இந்தக் கீரையை ராஜ்கிரா என்றும் அழைக்கிறார்கள்.
பேரீச்சம் பழங்கள்:
பேரீச்சம் பழங்கள் ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும். இதில் இரும்புச் சத்து. அதை உடல் கிரகித்துக் கொள்ள உதவும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபோலிக் அமிலங்கள் ஆகியன நிறைவாக இருக்கின்றன.
சிறு தாணியங்கள்:
சிறு தானியங்கள் நுண்ணூட்டச்சத்துக்குப் பெயர் பெற்றவை. நாம் அன்றாடம் உணவாகக் கொள்ளக்கூடிய தானியங்களான நெல், கோதுமை ஆகியவற்றில் இல்லாத பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் சிறு தானியங்களில் உண்டு. சிறு தானியங்கள் புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும் பெயர் பெற்றவை.
இவை தவிர நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, வெண்கலம், மாங்கனிஸ், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவையும் பி வைட்டமின்களையும் சில வகையான அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன. மேலும் உடல் சுகாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பசையம் (Gluten) இல்லை. ஆகையால் நாம் சிறுதானியங்களை உண்ண வேண்டும்.
வெள்ளை எள்:
வெள்ளை எள், இதில் இரும்புச் சத்து, ஃபோலேட், ஃப்ளேவனாய்ட்ஸ், காப்பர் இன்னும் சில சத்துக்களும் இருக்கின்றன. இவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கப் பயன்படுகிறது.
நாவல் பழம்:
நாவல் பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் பழம் என்று நாம் பொதுமைப் படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால் அதில் அத்தனை சத்துக்கள் உள்ளன. இரும்புச் சத்தைக் கூட்டவல்லது நாவல் பழம். ஆடி மாதம் வந்துவிட்டது நாவல் பழத்தை நன்றாக புசிக்கவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )