Solar Eclipse : சூரிய கிரகணம்: கர்ப்பிணிகள் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டுமா?
நாளை அக்டோபர் 25 சூரிய கிரகணம் ஏற்படுவதால் கர்ப்பிணிகள் இந்த 7 விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. இவை தாய், சேய் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது
நாளை அக்டோபர் 25 சூரிய கிரகணம் ஏற்படுவதால் கர்ப்பிணிகள் இந்த 7 விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. இவை தாய், சேய் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது
1. சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. கிரகணம் முடியும்வரை வீட்டினுள்ளேயே இருப்பது நல்லது.
2. கிரகணத்தின் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது.
3. சூரிய கிரகணத்தின் அந்த குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உணவேதும் அருந்துவதை தவிர்க்கலாம்
4. வீட்டின் ஜன்னல், கதவு ஆகியனவற்றை சாத்திவிட்டு ஜன்னலின் திரைச்சீலைகள் போட்டு உள்ளே இருக்க வேண்டும்.
5. கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் கைவளையல்கள், ஊக்குகள் போன்ற உலோகங்களை அணியக் கூடாது.
6. கிரகணம் முடியும் வரை மனதையும், உடலையும் அமைதியாக வைத்துக்கொள்ள மந்திரங்களை ஜபிப்பது நல்லது.
7. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கர்ப்பிணி பெண்கள் குளிப்பது சாலச் சிறந்தது.
உங்கள் வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இருந்தால் இவற்றை தவறாமல் கடைபிடிக்கச் செய்வது நலம் என நம்பப்படுகிறது
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நிழலாடுவது சில பகுதிகளில் சூரிய ஒளியை ஓரளவு தடுத்து பூமியின் மீது நிழலைப் விழச் செய்வது சூரிய கிரகணம் எனப்படும்.
இதே பகுதி சூரிய கிரகண நிகழ்வில், சூரியனும் சந்திரனும் ஒரு நேர்கோட்டில் சரியாக வருவதில்லை. சந்திரன் அதைக் கடித்தது போல் சூரியன் பிறை வடிவத்தைப் பெறுகிறது. பூமியில் பெனும்ப்ரா (Penumbra) எனப்படும் நிழலின் வெளிப்புற பகுதியை மட்டுமே சந்திரன் பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, 2022 அன்று உலகின் பல பகுதிகளில் தெரிந்தது. இப்போது நாளை அக்டோபர் 25, 2022 வருவது இரண்டாவது சூரிய கிரகணமாகும். இதுவே இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் கூட. நாளைய சூரிய கிரகணம் வடகிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தெரியும். அதே நேரத்தில் இது இந்தியாவில் பகுதி நேர சூரிய கிரகணமாக தென்படும்.
சூரிய கிரகணமானது கர்ப்பிணிப் பெண்கள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதாவது கருவில் இருக்கும் குழந்தையின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க காரணமாகும். பிறவிக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது
இது ஒருபுறம் இருக்க, கிரகண நேரங்களில் மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னையில் வரும் 25-ந் தேதி பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
ஒருபுறம் 5ஜி என்ற தகவல் தொழில்நுட்பப் புரட்சியை இங்கு பயன்படுத்திக் கொண்டே, மற்றொருபுறம் அறிவியலுக்கு நேர்மாறாக 'கிரகணம்' என்பது - ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால் ஏற்படுவது என்ற கற்பனையைப் பரப்பி, மக்களின் அறிவை நிரந்தர 'அடகுப் பொருளாக' ஆக்கி, மூடத்தனத்தினை மூலதனமாக்கி, மக்களை சிலர் சுரண்டி வருகின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு கூறுவது என்ன? அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) என்ற தலைப்பில், ''அறிவியல் மனப்பாங்கை வளர்த்துப் பரப்புதல், எதையும் கேள்வி கேட்டு அறியும் திறனை வளர்ப்பது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பவற்றை மக்களிடையே பரப்புவது ஒவ்வொரு குடிமகன்(மகள்) கடமையாகும்'' என்று கூறியுள்ளது. அதன்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியில் இருந்து அரசோச்சுபவர்கள், '''கிரகணம்' போன்றவை ஏன் ஏற்படுகின்றன? இதனால், கர்ப்பிணிப் பெண்கள் கருவுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது; அதுபோலவே, உண்ணுவதற்கு அந்த நேரத்தில், எந்தத் தடையும் கிடையாது'' என்று அரசு இயந்திரங்கள்மூலம் நாட்டு மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )