கீரையில் இத்தனை வகைகளா? - அத்தனையும் மருந்துங்க...! தெரிஞ்சிக்கோங்க
பூன மீசை கீரை சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது
தூத்துக்குடி மார்க்கெட்டில் வகைவகையாக கீரைகள்- அரைக்கீரை முதல் பூன மீசை கீரை வரை வாங்கலாம்.
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் காலையிலேயே பரபரப்பா காய்கறிகள் வந்துகிட்டு இருந்தது அதன் பக்கத்திலேயே அண்ணாசிலை பக்கத்துல வகை வகையா கீரைகளை அடுக்கி வச்சிட்டு இருந்தாங்க.அவங்கிட்ட அவங்க வியாபாரத்துக்கு இடையிலையும் பேச்சு கொடுத்தோம் என்னென்ன கீரை வகைகள் என்னென்ன மருத்துவ குணம் எவ்வளவு வருசமா கீரை வியாபாரம் செய்றீங்க என கேட்க, நாங்க இங்க கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல கீரை வியாபாரம் பார்த்து வாரோம.
சுற்று வட்டார கிராமம் பகுதியில் விளைவிக்கப்படும் அரைக்கீரை, சிறுகீரை,அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தண்டிக்கீரை, பசலைக்கீரை, முடக்கத்தான் கீரை, மணத்தக்காளி, பாலக்கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, முடக்கத்தான் கீரை, ஆவாரம் பூ கீரை, முருங்கைக்கீரை என வரிசையா அடுக்கி கிட்டே போனாங்க. கிட்டத்தட்ட கீரை வகைகள் அல்ல 500 வகை இருக்கிறதா சொல்லும் இவங்க இப்போ எங்க கிட்டத்தட்ட 30 வகையான கீரைகள் தினசரி மார்க்கெட்டுக்கு வரும். அது ஓரளவு தினமும் மக்கள் வாங்கக்கூடிய கீரை வகைகள் என்பதால் நாங்கள் அதை வாங்கி கொண்டு வியாபாரம் செய்துட்டு இருக்கோம்.
அதே சமயத்துல அரிய வகை கீரைகளான கானா வாழை, பூன மீசை தாலி போன்ற கீரைகளை கேட்டாங்கன்னா வாங்கி கொடுப்போம். ஏன்னா கானா வாழை கீரை விலை அதிகம் என்பதால் கேட்டால் வாங்கி கொடுப்போம் என கூறும் இவர்கள், இது எல்லாத்தையுமே வந்து மருத்துவ குணம் மிக்கது. தற்போது உள்ள சூழலில் முன்னாடில்லாம் அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை இதுதான் வந்து அதிகமாக வாங்குவாங்க. இப்ப எல்லாருக்குமே வல்லாரைக் கீரை, கரிசலாங்கண்ணி, இதெல்லாம் வந்து எல்லாருமே வாங்கி உபயோகிக்க தொடங்கியதால் இப்ப ஓரளவு வந்து அதிகமா நாங்க கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டே இருக்கோம் என்கிறார்கள்.
கானா வாழை தெரியுமா
கானா வாழையை ஓர் அற்புத மூலிகை என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பயன்பாடு அறிந்தவர்களைவிட அதை பயன்படுத்திப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும். இதிலுள்ள வேதிப்பொருள்கள் நோய் உண்டாக்கும் கிருமிகளை ஒழித்துப் புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. இதன் தண்டுகளில் மாவுச்சத்தும் மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.கன்றுக்குட்டிகள் விரும்பிச் சாப்பிடுவதால் இதை `கன்றுக் குட்டிப்புல்' என்று அழைக்கின்றனர். இளங்கன்றுக் குட்டிகள் தாய்ப்பாலை மறக்கவும் அதிக அளவு பால் கொள்முதல் செய்வதற்காகவும் கன்றுக் குட்டிகளுக்கு இந்த செடியை உணவாகக் கொடுப்பார்கள்.
பெண்களின் மார்பகத்தில் உண்டாகும் கட்டிகள், எரிச்சல், வலி, வீக்கம், புண் ஏற்படும்போது கானா வாழையின் முழுச் செடியையும் அரைத்து பற்றுப் போடுவதன்மூலம் பலன் கிடைக்கும். குறிப்பாகக் கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் சேர்ந்து காணப்படும் வாத நோயைக் குணப்படுத்துவதில் இது கை கண்ட மருந்தாகத் திகழ்கிறது என்கிறார்.
அது என்னங்க பூன மீசை கீரை
பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது .தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது,
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை என்கிறார் .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )