மேலும் அறிய
Advertisement
Monsoon Food: மழைக்காலத்துல சூடா சமோசா சாப்பிட போறீங்களா; அப்போ முதல இதை படிங்க...
மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என ஊட்டச்சத்து நிபுணர் கூறுவதை தெரிந்து கொள்வோம்
மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மீண்டு மழைக்காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம். இதமான வானிலை கொண்ட மழைக்காலம் அனைவரும் பிடிக்கும். இந்த சூழ்நிலையில் நம் உணவில் சிறிது எச்சரிக்கை காட்டுவது சாலச்சிறந்தது. மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என ஒரு பட்டியல் உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலவற்றை வகுத்துள்ளனர். அதை பற்றி தெரிந்து கொள்வோமா:
மழைக்காலங்களில் கீரைகள் முதல் கத்தரிக்காய் வரையிலும் இறைச்சி முதல் கடல் உணவுகள் வரையிலும் பல உணவுகளால் நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாம். மழைக் காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் அதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகமாக இனப்பெருக்கம் செய்து வெகுவாக பரவும் வாய்ப்புள்ளது என்று பிரபல மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார் .
என்ன காய் சாப்பிடலாம் :
வெப்ப காலத்தில் வாயு, வயிறு உப்புசம், அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் அவர்களின் மெட்டபாலிசம் பாதிக்கப்படுகிறது. அதுவே மழைக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். பாகற்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, வெள்ளரி, பூண்டு, தக்காளி போன்ற காய்கறிகளை மழைக்காலங்களில் எடுத்து கொள்ளலாம். இருப்பினும் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பச்சை இலை காய்கறிகள் :
மழைப்பொழிவால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். பச்சை காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தால் அவற்றில் அழுக்கு சேரும். அதனால் அவை மேலும் மாசுபட வாய்ப்புள்ளது. கீரை, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நல்லது.
கத்தரிக்காய் : கத்தரிக்காயின் ஊதா நிற தோல் ஆல்கலாய்டுகள் எனப்படும் ரசாயன வகைகளால் ஆனது. பூச்சிகளுக்கு எதிரான நச்சுக்களை கொண்டதால் அவற்றை மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டும். ஆல்கலாய்டுகளால் சொறி, படை, அரிப்பு . தோல் வெடிப்பு, குமட்டல் போன்ற அலர்ஜிகள் உண்டாகும்.
வறுத்த உணவுகள் : மழைக்காலத்தில் நமது செரிமான செயல்பாடு சற்று மெதுவாக தான் இருக்கும். அதனால் எண்ணெயில் பொறித்த உணவுகளான பக்கோடா, சமோசா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். பானிபூரி போன்றவற்றையும் தவிர்க்கவும். இவை பாக்டீரியாக்களைக் பரப்பி நோய்களுக்கு வழிவகுக்கும்.
இறைச்சி மற்றும் கடல் உணவுகள்: நீர் மூலம் நோய்கள் பரவ அதிகமான வாய்ப்புள்ளதால் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
கூல் ட்ரிங்க்ஸ் : இந்த பானங்களை உட்கொள்வதால் அவை உடலில் உள்ள தாதுக்களை குறைகின்றன. அதனால் செரிமானம் பாதிக்கப்படும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion