Polio Vaccine: போலியோ நோய்க்கு மருந்தே இல்லை! ஏன் தடுப்பூசி போட வேண்டும்? - ஓர் அலசல்
Polio Vaccine :19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் போலியோ தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் பிறகு போலியோ மருந்தின் அவசியம் அனைவருக்கும் புரிந்தது.
போலியோ என்பது ஒரு வைரசால் ஏற்படும் நோய். இந்த வைரசானது நீர் மற்றும் நாம் உண்ணும் உணவின் மூலமாக பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. பாதிக்கப்படுவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானர்களில் நிரந்தரமாக கை கால் செயலிழப்பு உள்ளிட்ட முடக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இது ஒரு வைரஸ் தொற்று:
முடக்குவாதமானது குழந்தைகளுக்கு வரும்போது, இயற்கையினால் இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதாக மக்கள் நினைத்தனர். 1789 ஆம் ஆண்டு மைக்கேல் அண்டர்வுட் என்பவர்தான், இந்த நோயானது இயற்கையிலே வருவதில்லை, வைரஸ் நோயால் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார்.
19 ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் போலியோ தொற்று நோயின் பரவலானது, அதிகரித்தது. இதனால் 18 பேர் உயிர்ழந்தனர் என்றும் 130க்கும் மேற்பட்டோர் கை-கால் செயலிழந்து பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
1905 ஆம் ஆண்டு ஐவர் விக்மேன், என்பவர்தான், இந்த வைரசானது பரவும் தன்மை கொண்டது எனவும், இந்த நோயானது ஒரு மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் என்பதை கண்டறிந்து தெரிவித்தார்.
தடுப்பு மருந்து:
இதையடுத்து, மீண்டும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் போலியோ தொற்றானது, பெரும் பரவலானது. இதனால் சுமார் 2000 பேர் இறந்ததாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உலகம் முழுக்க 6000க்கும் மேற்பட்டோருக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.
1952 ஆம் ஆண்டு ஜோனஸ் சால்க் என்பவர் போலியா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டறிந்தார். 1957 ஆம் ஆண்டு ஆல்பர்ட் சாபின் என்பவர் ஊசிக்கு பதிலாக சொட்டு மருந்தை கண்டறிந்தார். போலியோ நோய் ஏற்பட்டால் குணப்படுத்த மருந்து இல்லை, தடுப்பு மருந்து மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போலியோ தடுப்பு மருந்தானது ஊசி மற்றும் சொட்டு மருந்து மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஊசியில் செலுத்தப்படும் மருந்தானது, செயலிழக்கப்பட்ட வைரஸ் கொண்டு தயாரிக்கப்பட்டது. சொட்டு மருந்து மூலம் வழங்கப்படும் மருந்தானது, வீரியம் குறைக்கப்பட்ட வலுவிழக்க ப்பட்ட வைரஸ் கொண்டு தயாரிக்கப்பட்டது, எனவே இம்முறையில் வைரஸ் உயிருடன்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
ஒழிந்தது:
1993 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முற்றிலுமாக போலியோ ஒழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவில் போலியோ தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. உலகில் ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொற்று கண்டறியப்படுகிறது.
அதன் காரணமாகவே ஒழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இனி மீண்டும் வரக்கூடாது என்ற காரணத்தாலும், வந்தால் குணப்படுத்தும் மருந்து இல்லையென்பதாலும் தொடர்ந்து தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )