பாராசிட்டாமல், பேன் டி உள்ளிட்ட 53 மாத்திரைகள் தரநிலை சோதனையில் தோல்வி என அதிர்ச்சி தகவல்.!
குழந்தைகளுக்கு கூட அளிக்கப்படும் மருந்துகளானது தரநிலை சோதனையில் தோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது
மத்திய மருந்துகள் தர நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதன் சமீபத்திய மாதாந்திர அறிக்கையில் பாராசிட்டமால், பான்-டி மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் உட்பட பொதுவாகப் பயன்படுத்தப்படும் 50க்கும் மேற்பட்ட மருந்துகளானது "தரமான தரத்தில் இல்லை" என தகவல் வெளியாகியுள்ளது.
மாத்திரைகள்:
தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாக கண்டறியப்பட்ட மருந்துகளில் பிரபலமான மருந்துகளான பாராசிட்டமால் ஐபி 500 மி.கி, பான்-டி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஷெல்கால் (வைட்டமின் சி மற்றும் டி3), நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு மற்றும் இரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
நிறுவனங்கள்:
தரமற்ற மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பல முக்கிய மருந்து நிறுவனங்களில் அல்கெம் லேபரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), ஹெட்டோரோ மருந்துகள், கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் மற்றும் மெக் லைஃப் சயின்சஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த தருணத்தில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எச்சரிக்கை மற்றும் கூடுதல் ஒழுங்குமுறை ஆய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதையும் உணர முடிகிறது.
தர சோதனைகளில் தோல்வியுற்ற மருந்துகளில் மெட்ரானிடசோல் உள்ளது, இது வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, இது பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக் லிமிடெட் (HAL) மூலம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் மூலம் தயாரிக்கப்பட்டு, டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் மூலம் விநியோகிக்கப்படும் பிரபலமான கால்சியம் சப்ளிமெண்ட் ஷெல்கால், தேவையான தரநிலைகளை சந்திக்கத் தவறிவிட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )