மன அழுத்தத்திற்கு மருந்தாகும் மேஜிக் காளான்: (Psilocybin) சைலோசைபின் பற்றி வெளியான ஆய்வு தகவல்
உலகம் முழுவதும் சராசரியாக 100 மில்லியன் பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. அதுவும் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத மன அழுத்தம் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சராசரியாக 100 மில்லியன் பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. அதுவும் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத மன அழுத்தம் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
அண்மையில் நடந்த ஒரு ஆய்வின்படி, காளானில் உள்ள ஒருவகை வேதிப் பொருளான சிலோசிபின் (psilocybin) என்பது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்தாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் உள்ள வேதிப் பொருள் 12 வாரங்கள் வரை மன அழுத்ததைக் கட்டுப்படுத்த வல்லமை கொண்டதாக உள்ளது. ஸைலோசைபின் என்ற வேதிப்பொருள் கொண்ட 25 மில்லி கிராம் மாத்திரையானது நோயாளிகளை ஏதோ கனவில் இருப்பது போன்ற சூழலுக்கு கொண்டு செல்கிறது. ஆனால் இதில் ஏற்படும் குறுகிய கால பக்க விளைவுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆகையால் நோயாளிகளை கவனமாகக் கையாண்டு அவர்களுக்கு உதவிகரமாக இருப்பது மிகமிக அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பாக இன்னும் நீண்ட கால ஆய்வை நிறைய பேர் நடத்தியே ஒரு தீர்க்கமான முடிவை எட்ட இயலும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஆய்வை காம்பஸ் பாத்வேஸ் என்ற மனநல மருத்துவ அமைப்பு மேற்கொண்டது. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள் என மொத்த 22 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தி கார்டியன் நாளிதழுக்கு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருந்துகளுக்கு கட்டுப்படாத மன அழுத்ததிற்கு சிலோசிபின் (psilocybin) 10 முதல் 20% வரை நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளது. 3 வார பயன்பாட்டுக்குப் பின்னர் மன அழுத்தம் 30% குறைவதைக் காண முடிகிறது என்று தெரிவித்துள்ளது.
Financial Times என்ற பிரிட்டிஷ் நாளிதழ் மனநல பாதிப்புகளை குணப்படுத்துவதில் சைக்கிடெலிக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்துவதில் இருக்கும் அச்சுறுத்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற வெகு சொற்பமான அளவில் இது சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக சைக்கிடெலிக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான நிறைய ஆராய்ச்சிகள் பல்வேறு மருந்து நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் காம்பஸ் பாத்வேஸ் மேற்கொண்ட இந்த ஆய்வும் முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
மனநலம் காப்போம்:
நம் மனம் நலமாக இருக்கிறதா என்று நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். நாம் எந்த வேலை செய்யும் முன்பும் இதனை கவனித்தல் மிகவும் சிறந்தது. ஏனெனில் நாம் செய்யும் அத்தனை வேலைகளோடும் நேரடி தொடர்பு கொண்டுள்ளது நம் மன நலன் தான். அது சீராக இருக்கிறதா, நாம் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஆரம்பகட்டத்திலேயே மனநல பாதிப்புகளை சரி செய்யாவிட்டால் அது ஸ்கிசோஃபெர்னியா எனும் உச்சபட்ச நோய்க்கு வழிவகுத்துவிடும்.
ஸ்கிசோஃபெர்னியா எனும் உச்சபட்ச நோய்
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றின்படி, இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களில் 7 சதவீதம் பேர் ஸ்கிசோஃபெர்னியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் தகவல் வெளிவந்துள்ளது. 1859ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆக்ரா மனநல காப்பகம், இந்தியாவின் மிகப் பழமையான மனநல மையம் ஆகும். வட இந்தியாவில் மனநலப் பிரச்னைகள் குறித்த சிகிச்சை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான சிறந்த மையமாக விளங்கும் இம்மருத்துவமனை தன் சமீபத்திய ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் சுமார் 7 சதவிகிதம் பேர் வெவ்வேறு அளவு தீவிரத்தன்மை கொண்ட Schizophreniaவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஸ்கிசோஃபெர்னியா நோய் மரபணு மூலமாகவும் தோன்றலாம் அல்லது எந்த மூலக் காரணமும் இன்றியும் தோன்றலாம். ஆனால் இதன் அறிகுறிகளை விரைவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் மூலம் நாம் இந்நோய் தீவிரமடைவதைத் தடுக்கலாம்” என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றன
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

