மேலும் அறிய
Madurai Govt Hospital: இளம் பெண் வயிற்றில் 7 கிலோ சினைப்பை கட்டி: அகற்றிய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு!
மதுரை அரசு மருத்துவமனையில் இளம்பெண் வயிற்றில் இருந்த 7 கிலோ சினைப்பை கட்டியை அகற்றிய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு.

சினைப்பை_கட்டி
தேனி மாவட்டம், போடி அருகேடெம்புச் சேரியைச் சேர்ந்த தம்பதியின் 8 மாத குழந்தை பால் குடிக்கும்போது, புட்டியில் இருந்த ரப்பரை விழுங்கி, மூச்சு விட முடியாமல் திணறியது. இதையடுத்து தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவம் னையில் சேர்த்தனர். சிகிச்சையில் சேர்ந்த குழந்தைக்கு ரத்தத்தில் 80% ஆக்சிஜன் அளவு குறைந்து காணப் பட்டது. பின்னர் உள் நோக்கி பரிசோதனை கருவி உதவியுடன் பரிசோதித்தபோது விழுங்கிய ரப்பர்.

குழந்தை யின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில்சேர்க்கப்பட்டு, 'ஓசோபாகோஸ்கோபி" என்ற கருவியின் உதவியுடன் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த ரப்பரை டாக்டர் கள் அகற்றினர். ரப்பரை அகற்றிய பிறகு குழந்தை நலமடைந்தது. இந்நிலையில் மதுரை அரசு ராசாசி மருத்துவமனை இளம் பெண் வயிற்றில் இருந்து 7கிலோ சினைப்பை கட்டியை அகற்றியுள்ளது.

மதுரை ஆனையூர் பார்க்டவுன் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி சர்மிளா தேவி (29). சர்மிளாதேவி கடந்த ஒரு வருடமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வயிறு வீக்கம் மற்றும் கடுமையான வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலன் பிரிவில் உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே மற்றும் ஸ்கேஸ் பரிசோதனையில் சுமார் 6 மாதங்களாக அவருக்கு 30x30 cm அளவுள்ள சினைப்பைக்கட்டி இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு, சுமார் 7 கிலோ அளவுடைய சினைப்பைக்கட்டி அறுவை சிகிச்சை மூலம் ,மிகுந்த சிரத்தையுடன் மருத்துவத்துறையினர் அகற்றியுள்ளனர்.

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிவகங்கை: ஏலம் எடுப்பதில் தகராறு.. நிர்வாகியின் மண்டை உடைப்பு.. தாக்கிக்கொண்ட திமுகவினர்!
இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் சுமதி தலைமையிலான மருத்துவர்களுக்கும், மயக்க மருத்துவத்துறைத் தலைவர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திசு பரிசோதனையில் சாதாரண கட்டி (benign) என்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது நோயாளி பரிபூரண உடல் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சையளித்த மருத்துவ குழுவிற்கு, மருத்துவக்கல்லூரி டீன் இரத்தினவேல் பாராட்டு தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
கோவை
Advertisement
Advertisement