ஜப்பான் வரை பரவிய ஓமைக்ரான் வைரஸ் : இந்தியாவுக்கு வார்னிங்!
பிரான்ஸ் நாட்டிலும் ஒருவருக்கு ஓ மைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மொசாம்பிக்கில் தரையிரங்கிவிட்டு பிரான்ஸ் வந்த 53 வயது முதியவரில் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் உருவான ஓ மைக்ரான் வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதை அடுத்து தற்போது ஆசிய நாடான ஜப்பானிலும் கண்டறியப்பட்டுள்ளது. நமீபியாவில் இருந்து ஜப்பான் வந்த ஒருவருக்கு ஓ மைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை ஜப்பான் அரசின் தலைமைச் செயலாளர் ஹிராகாஜூ உறுதிபடுத்தியுள்ளார்.இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து ஜப்பான் வருபவர்களுக்கு அந்த நாடு நேற்று தடை விதித்துள்ளது.
இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலும் ஒருவருக்கு ஓ மைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மொசாம்பிக்கில் தரையிரங்கிவிட்டு பிரான்ஸ் வந்த 53 வயது முதியவரில் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Confirmed cases of Omicron variant:
— The Spectator Index (@spectatorindex) November 30, 2021
- Australia
- Austria
- Belgium
- Botswana
- Brazil
- Canada
- Czech Republic
- Denmark
- Germany
- Hong Kong
- Israel
- Italy
- Japan
- Netherlands
- Portugal
- South Africa
- Spain
- Sweden
- Switzerland
- UK
இதற்கிடையே. புதிய வகை ஓமைக்ரான் வைரசால் உலக நாடுகள் மீண்டும் கொரோனா அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்திய அரசாங்கமும் தற்போது இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக, விமான நிலையங்களிலும், வெளிநாட்டு பயணிகளுக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா, இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
கொரோனா வைரசால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ் என்று அதன் தாக்கத்தினாலும், அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காலும் இந்திய மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஓமைக்ரான் வைரசின் அச்சுறுத்தலுக்கு உலக நாடுகள் ஆளாகியுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் பாதிக்கும் தன்மை கொண்ட இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இஸ்ரேல், ஹாங்காங், போஸ்ட்வானா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்க நாடுகளின் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருக்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

