Mpox Case India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
Mpox Virus In India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபருக்கு Clade 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்பட்ட ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை தொற்று உறுதி
நேற்றைய தினம் குரங்கு அம்மை தொற்றுள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் பயணம் செய்த, இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் வயது கொண்ட ஆண் ஒருவருக்கு, குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும் நோயாளி ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் நோயாளியின் மாதிரிகள் Mpox இருப்பதை உறுதிப்படுத்த பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
#UPDATE | The previously suspected case of Mpox (monkeypox) has been verified as a travel-related infection. Laboratory testing has confirmed the presence of Mpox virus of the West African clade 2 in the patient. This case is an isolated case, similar to the earlier 30 cases… https://t.co/R7AENPw6Dw pic.twitter.com/ocue7tzglR
— ANI (@ANI) September 9, 2024
அச்சம் கொள்ள தேவையில்லை:
அந்த நபருக்கு Clade 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Clade 1 வகை தொற்றே மிக ஆபத்தானது என்றும் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
அவசரநிலை:
ஆப்பிரிக்கா, காங்கோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் Mpox தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox-யை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
காங்கோ குடியரசு நாட்டில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை, பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவாகியுள்ளனர்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு:
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை மேம்படுத்தவும், தேவையான மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்து, தனிமைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அமைச்சகம் , மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Also Read: Mpox: இந்தியாவில் குரங்கம்மை தொற்று சந்தேகம்.? மாநிலங்களுக்கு பறந்த மத்திய அரசின் உத்தரவு.!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )