ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லது! மருத்துவ ரீதியில் அடுக்கப்படும் காரணங்கள்!
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப அளவுக்குள் இருக்கும் வரை ஆபாசப்படங்கள் பார்ப்பதும் பாலியல் ரீதியான நன்மையை கொடுக்கிறது.
ஆபாசப்படங்கள் என்பது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் விஷயமாக ஆகிவிட்டது. இந்த ஆபாசப்பட தளங்களால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் உண்டானாலும் பாலியல் ரீதியாக ஆபாசப்படங்கள் சில நல்ல விஷயங்களையும் கொடுக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப அளவுக்குள் இருக்கும் வரை ஆபாசப்படங்கள் பார்ப்பதும் பாலியல் ரீதியான நன்மையை கொடுக்கிறது.
ஆபாசப்படம் என்பது தனி அறையில் தனி ஆளாக அமர்ந்து பார்க்கவேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. குறிப்பாக திருமணம் ஆனவர்கள் ஆபாசப்படத்தை பார்ப்பது குற்றமாகவே இந்த சமூகம் பார்க்கிறது. அதேவேளையில் உங்கள் துணையுடன் ஆபாசத்தைப் பார்ப்பது பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா? தனிப்பட்ட இன்பத்திற்கானதே ஆபாசப்படம் என்ற எண்ணத்தால் துணையோடு ஆபாசப்படம் பார்ப்பது பெரும்பாலும் இந்திய சமூகத்தில் நடக்காத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் துணையுடன் ஆபாசப்படம் பார்ப்பது என்பது மருத்துவ ரீதியாக பாலியலுக்கு பெரிய உதவியை செய்கிறது.
பாலியல் மனநிலைக்கு அழைத்துச் செல்லும்..
துணையோடு சேர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது உங்கள் இருவரையுமே பாலியல் தொடர்பான நல்ல மூடுக்கு அழைத்துச் செல்லும். அன்று உங்களுக்கு பாலியல்தூண்டல் இல்லை என்றாலும் ஆபாசப்படம் உங்களை அந்த மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.
கற்றுக்கொள்ளலாம்..
ஆபாசப்படம் என்பது பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழியாகும். ஆபாசப்படங்கள் பாலியல் திருப்தியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. ஆனால் ஸ்கிரிப்ட் முறையில் பார்க்கும் ஆர்வத்திற்காக எடுக்கப்படும் ஆபாசப்படக்களை ரியல் வாழ்க்கையில் பொருத்திப்பார்ப்பது தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்கும்.
போர்ப்ளே எனும் முன் விளையாட்டு..
பாலியல் உறவுக்கு போர்ப்ளே எனும் முன் விளையாட்டு மிக முக்கியம் என்கிறது மருத்துவம். தொடக்கத்திலேயே பாலியல் உறவில் ஈடுபடாமல் முத்தமிடுதல், தழுவுதல், மனம் விட்டு பாலியல் தொடர்பாக பேசுதல் போன்ற முன் விளையாட்டே நல்ல பாலியல் உறவை முடிவு செய்கிறது. அதுமாதிரியான போர்ப்ளேவுக்கு ஆபாசப்படங்கள் கைகொடுக்கின்றன.
ஆடியோ..
பாலுறவின்போதான பேச்சுகள், உரையாடல்கள், சத்தங்கள் என அனைத்துமே நல்ல ஆரோக்கியமான பாலியல் உறவுக்கு கைகொடுக்கும். அதுமாதிரியான விஷயங்களை ஆபாசப்படங்கள் கற்றுக்கொடுக்கும்.
புதுப்புது வழிகள்..
இப்படியெல்லாம் பாலுறவை சுவாரஸ்யமாக்கலாம் என ஆபாசப்படங்கள் சொல்லிக்கொடுக்கும். புனையப்பட்ட கதை என்றாலும் பாலுறவை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல ஆபாசப்படங்கள் உதவுகின்றன. அப்படியே செய்யவது தேவையற்றது என்றாலும் ஆரோக்கியமான விஷயங்களை ஆபாசப்படங்களில் இருந்து எடுத்துக்கொண்டு பாலியல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )