Covid Test At Home | வீட்டிலேயே பண்ணுங்க கொரோனா பரிசோதனை : ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள்!
கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெளியில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை விட வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள கிட்கள் கிடைக்கின்றன.
கொரோனா முன்றாவது அலை இதோ தெருமுனையில் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற அச்சத்தை உலக நாடுகள் ஏற்படுத்தி வருகின்றன. மீண்டும் மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் கூடத் தடை என பழைய விதிகளை அரசு தூசுதட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஓமைக்ரான் பரவல் சாதாரண கொரோனா பரவல் போல இல்லாமல் தனி அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. இதற்கிடையே எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெளியில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை விட வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள கிட்கள் கிடைக்கின்றன.
வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்வது எப்படி?
கொரோனா பரிசோதனைக்காக மொத்தம் ஏழு பிராண்ட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை அத்தனையும் ஐசிஎம்ஆர்ல் அனுமதி பெற்றவை. இவற்றில் ஆறு மூக்குப் பகுதியில் ஸ்வாப் செய்து பரிசோதனை செய்யப் பயன்படுத்தப்படுபவை.
மைலேப் டிஸ்கவரி கொவிசெல்ஃப், கோவிட்19 ஓடிசி ஆண்டிஜென் டிவைஸ், அப்போட் ரேப்பிட் பான்பையோ கோவிட்19, ஆண்டிஜென் ரேப்பிட் டெஸ்ட் டிவைஸ், மெரி டையகனஸ்டிக்ஸ் கொவிஃபைண்ட், ஆங்க்டெக் கொவிட்-19 ஹோம் டெஸ்ட் கிட், ஹீல்ஜென் சையிண்டிஃபிக் லிமிட்டெட் க்ளினிடெஸ்ட், ஆகியவை ஹோம் டெஸ்ட் கிட்களை தயாரிக்கின்றன.
இவற்றில் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்வது நம்பகத்தன்மை உடையதாகக் கருதப்படுகிறது. ஆனால் அறிகுறிகள் இருக்கும் நபருக்கு நெகட்டிவ் வரும் நிலையில் அவர்களை ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யச் சொல்லி ஐசிஎம்ஆர் அறிவுறுத்துகிறது.
இவற்றில் வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கிட்கள் அமேசான் தளத்திலேயே கிடைக்கின்றன.
வழிமுறை என்ன?
கிட்டில் இருக்கும் பஃபர் ட்யூபை எடுக்கவும். அதனை பெர்ஃப்ராஸ்டட் பகுதி என குறிப்பிடப்பட்டிருக்கும் பொட்டியில் வைக்கவும்
பரிசோதனைக் கருவியை சமமான தளத்தில் வைத்து உங்களது கொவின் ஆப்பில் அதில் இருக்கும் கோடினை ஸ்கேன் செய்யவும்
ஸ்வாப்பை அதன் வால் பகுதியில் பிடித்து எடுக்கவும் அதனை பொறுமையாக நாசித்துவாரத்தின் ஒரு பகுதியில் உள்ளே எட்டும் வரை நுழைக்கவும்
உள்ளே ஐந்து முறை அதனைச் சுழற்றவும்
இதையே மற்றொரு நாசித்துவாரத்திலும் செய்யவும்.
பிறகு இதனை பஃபர் ட்யூப்பில் வைத்து 8-10 முறை சுழற்றவும் பிறகு அதனை இறுக்கமாக மூடவும்,
தற்போது கொடுக்கப்பட்டுள்ள நீர்மத்தில் இருந்து நான்கு சொட்டுகளை பரிசோதனை கருவியில் விடவும்.
பதினைந்து நிமிடம் வரை அதனை தொடாமல் அப்படியே வைத்திருக்கவும்.
15 நிமிடத்துக்குப் பிறகு அதில் தென்படும் ரிசல்ட்டைப் பார்க்கவும்
இந்த முறை ஒவ்வொரு பரிசோதனைக் கருவிக்கும் மாறுபடும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )