Cholesterol and Skin Allergy : சரும அலர்ஜி, முகத்தில் அரிப்பு.. இதெல்லாம் ஏற்பட்டால் கொலஸ்ட்ரால் செக் பண்ணுங்க
திடீரென்று சருமத்தில் அலர்ஜி, முகத்தில் நீங்காத அரிப்பு, அதிகப்படியான கரும்புள்ளிகள் ஏற்படும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
திடீரென்று சருமத்தில் அலர்ஜி, முகத்தில் நீங்காத அரிப்பு, அதிகப்படியான கரும்புள்ளிகள் ஏற்படும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அப்படி கொழுப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் சிலவற்றையும் மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
முகத்தில் அரிப்பு:
உங்கள் முகத்தில் திடீரென அடிக்கடி அதிகளவில் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக கொழுப்பு அளவை பரிசோதிக்க வேண்டும். முகத்தில் அரிப்பு, முகம் சிவந்துபோவதும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறி.
முகத்தில் கரும்புள்ளி:
உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது முகத்தில் முகப்பரு அதிகரிக்கும். அதேபோல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். அதேபோல் கண்ணைச் சுற்றி சிவப்பு நிறத்தில் சிறு புள்ளிகள் மருக்கள் உருவானாலும் கொழுப்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
வெப்பத் தடிப்ப்புகள்:
உடலில் சில தடிப்புகள் ஏற்படுவது இயல்பே.. ஆனால் கொழுப்பு அதிகரிக்கும்போது கமோரியான் என்ற வெப்ப தடிப்புகள் ஏற்படும். இதை நாம் சில நேரங்களில் வியர்வையால் ஏற்படும் தடிப்பு என்று அசட்டை செய்துவிடுவோம். ஆனால் அதை கவனிக்காமல் விட்டால் கொழுப்பு ஏறிக் கொண்டே சென்று கொண்டிருக்கும்.
சரும நிறம் மாறுதல்:
கொழுப்பு அதிகரிக்கும் போது சருமத்தின் நிறம் மாறும். நம் உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் ஒன்று கண்களின் மேல் தோன்றும் சிறு தடிப்புகளும் பார்வையில் ஏற்படும் மாற்றங்களும். பார்வை குறைகிறது என்றால் அது முழுக்க முழுக்க கருவிழி சார்ந்தது என்று நினைத்துவிட வேண்டாம். சில நேரம் அது கொழுப்பால் கூட இருக்கலாம். கார்னியாவைச் சுற்றி சாம்பல், வெள்ளை, மஞ்சள் நிற படிமங்கள் காணப்படலாம். கண்ணின் மேல்புறத்தில் மஞ்சள் நிறத்தில் சிறு தடிப்புகள் உருவாகலாம். இவை தெரிந்தால் நிச்சயமாக கொழுப்பின் ஆரம்ப அறிகுறி என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கொழுப்பின் வகைகள்:
உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு அவசியமானது. ஆனால் அதுவே அதிகமானால் ஆபத்தானது. கொழுப்பை முழுக்க முழுக்க புறக்கணித்துவிடவும் முடியாது. ஏனெனில் உடலில் ஹார்மோன்கள், மெம்பரன்ஸ் மற்றும் வைட்டமின் டி தக்கவைத்தல் உள்ளிட்ட பலவற்றிற்கு கொழுப்பு மிகவும் அவசியமானது. கொழுப்பு நீரில் கரையக்கூடியது அல்ல. அதனால், Lipoproteins ரத்தம் வழியே நீந்தி உடலின் மற்ற உள்ளுருப்புகளுக்கு செல்ல பயன்படுகிறது. இதில் இரண்டு வகை இருக்கிறது. அவை LDL (Low-density Lipoproteins) மற்றும் HDL (high-density Lipoproteins). குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) - இவைதான் கெட்ட கொழுப்பு. குறைந்த அளவிலான Lipoproteins இதயத்தின் அறைகளான ஆர்டெரிகளில் அடைத்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.
அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (high-density Lipoproteins)- என்பது இதயத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளாமல் பாதுகாக்கும் பணியை செய்பவை. அப்படி, உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்தாலும், அதை கல்லீரலில் இருந்து நீக்க உதவி புரிகிறது.
அதிக கொழுப்பு என்பது என்ன?
குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்கிறது. இவை கெட்ட கொழுப்புகள். உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை ’ cholesterol’ என்று அழைக்கிறது அறிவியல் உலகம்.
இதற்கு hypercholesterolemia அல்லது hyperlipidemia என்று பெயர். உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால், இதயத்தில் அடைப்பு ஏற்பட்டும். உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் இதயம் மற்றும் மூளை தொடர்பாக பல பிரச்சனைகள் உருவாகும். உடல்நிலை பாதிக்கப்படும்.
உடலில் கெட்ட கொழுப்பினால் பல நோய்களின் கூடாரமாக உங்கள் உடல் மாறிவிடும்.
அதிக கொழுப்பு- 240 மி.கி /
பார்டர் லைன் கொழுப்பு என்பது - 200 -239 மி.கிராம் அளவு
இயல்பான கொழுப்பு - 200 மி.கிராம்
40ஐ நெருங்கிவிட்டால் அடிக்கடி கொழுப்பை பரிசோதித்துக் கொள்வது நலம். வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். இந்த மூன்று கட்டுக்குள் இருந்தால் உள் உறுப்புகள் பலவற்றையும் பாதுகாத்து வாழலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )