World Mental Health Day: அதிகமா சாப்டா கூட பிரச்சனையா? சர்வதேச மனநலம் நாளில் தெரிந்துக் கொள்ள் வேண்டிய விஷயங்கள் என்ன?
சர்வதேச மனநலம் நாள் என்பது மக்கள் மத்தியில் மன நலம் குறித்த விழிப்புணரவை ஏற்படுத்தவே என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலக மனநல கூட்டமைப்பு (WFMH) 1990 களின் முற்பகுதியில் முறையாக இந்த நாளை உருவாக்கியது. மனநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆளுமைக் கோளாறு, மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கவும், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பாதுகாப்பான இடத்தையும், ஆறுதலையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூறுப்படி, "மனநலப் பிரச்சினைகள் தொடர்பாக பணிபுரியும் அனைவருக்கும் தங்கள் வேலையைப் பற்றி பேசுவதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும் மனநலப் பராமரிப்பை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உண்மையாக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மனநல தினம் 2023 க்கான கருப்பொருள் “மனநல ஆரோக்கியம் ஒரு உலகளாவிய மனித உரிமை” என்பதே ஆகும்.
உலக மனநல தினம் 1992 ஆம் ஆண்டு அப்போதைய துணை பொதுச்செயலாளராக இருந்த ரிச்சர்ட் ஹண்டர் தலைமையில் உலக மனநல கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் உலக மனநல தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் கருப்பொருள் "உலகம் மனநல சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் " என இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ரோபோ போல் தான் இயங்கி வருகிறோம். சமூகத்தில் நமக்கென்று ஒரு இடம் உருவாக்க நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதில் பலரும் அவர்களது மனநலம் பற்றி யோசிப்பதே இல்லை.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தாலோ இல்லை மூட் அவுட்டாக இருந்தாலோ நாடும் ஒரே விஷயம் உணவு தான். ஆனால் இதுவே ஒரு சிலருக்கு BINGE EATING DISORDER என்ற ஒரு விதமான மனநோய் வர காரணமாக இருக்கிறது. இது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான அறிகுறியாகும். நமக்கு அறியாமலேயே இந்த மனநிலை மாற்றம் நமக்குள் வந்து விடுகிறது. இதற்கு பெரிதாக அறிகுறிகள் ஏதும் இல்லை.
இது தொடர்பாக மனநல மருத்துவரும் புகழ்பெற்ற மனநல நிபுணருமான டாக்டர் எரா தத்தா கூறுகையில், ” BINGE EATING DISORDER என்பது வெறும் மன உறுதி அல்லது சுயக்கட்டுப்பாட்டுக்கு சம்மதமானது இல்லை. இது உளவியல் மற்றும் உடலியல் கூறுகளைக் கொண்ட ஒரு சிக்கலான மனநல நிலை, இது உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற நபர்களை பாதிக்கிறது. இந்த மனநிலையில் இருக்கும் நபர்கள் தேவைக்கு அதிகமான உணவுகளை உட்கொள்வார்கள். முக்கியமாக மிகவும் குறுகிய நேரத்தில் அதிக அளவு உணவை உட்கொள்கின்றனர், அதோடு அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மீதான கட்டுப்பாட்டை இழக்கவும் செய்கின்றனர்” என குறிபிட்டுள்ளார்.
BINGE EATING DISORDER பெரும்பாலும் உணர்ச்சிப் போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு அல்லது தனிமை போன்ற உணர்வுகளைச் சமாளிக்க பலர் உணவை நாடுவது வழிமுறையாகப் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியான குற்ற உணர்வு மற்றும் அவமானம் ஆகிய காரணத்தினால் அடிக்கடி உணவை உட்கொள்கின்றனர். இப்படி தொடர்ந்து நடைபெறுவதால் மனநலத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இது அமைகிறது. பலருக்கும் இது தங்களுக்கு அறியாமலே நடப்பதால், தகுந்த நேரத்தில் மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும் என கூறியுள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )