Covid 19 Vaccine: சிறுவர்களுக்கான தடுப்பூசி : ஜனவரி 1 ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்
தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடைய சிறுவர்கள் ஜனவரி 1 ம் தேதி முதல் cowin இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடைய சிறுவர்கள் ஜனவரி 1 ம் தேதி முதல் cowin இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 15 - 18 வயதான சிறுவர்கள் ஜனவரி 3 ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் இல்லாத மாணவர்கள் 10 வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
#BREAKING | சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவுhttps://t.co/wupaoCQKa2 | #Corona | #coronavaccine | #CoWIN pic.twitter.com/8lXoBBeboP
— ABP Nadu (@abpnadu) December 27, 2021
முன்னதாக, உருமாறிய கொரோனாவாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு நேற்று முன் தினம் இரவு பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், “இந்தியாவில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதே போல ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவபணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” என்று பேசினார்.
மேலும் “ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மாநகராட்சி பள்ளியில் தொடங்கும் என்றும், 15-18 வயதை சேர்ந்த சுமார் 33 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )