மேலும் அறிய
Advertisement
வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?
வட தமிழ்நாட்டில் இன்று 846 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 251 , வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 156, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92 , திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110 என பதிவாகியுள்ளது .
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 846 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை , 1024 ஆக உள்ளது. மேலும் வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம் , திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு பலனின்றி இறந்து போனவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது . இன்றைய நிலவரப்படி இந்த 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4946 ஆக உள்ளது .
கொரோனா தமிழ் நாட்டில் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் , கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ் நாடு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது .இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்ட நிலையில் . தற்பொழுது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி போடும் பனி சுகாதார துறையால் தீவிரப்படுத்தப்பட்டு , நேற்று முன் தினம் நிலவரப்படி கொரோனா முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 24 .97 கோடியை கடந்துள்ளது .
இது தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 .7 சதவீதமாகும் . இதேபோல் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 .16 கோடியாக உயர்ந்துள்ளது . இது தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 .8 சதவீதமாகும் . வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் தடுப்பூசிகளுக்கு நாளுக்கு நாள் சிறப்பு தடுப்பூசி மையங்கள் மாறுபட்டாலும் . நிரந்தரமாக 11 தடுப்பூசி மையங்கள் செயல் பட்டுவருகின்றன .
இதில் வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள ஹோலி கிராஸ் பள்ளி சத்துவாச்சாரியிலும் , காட்பாடி டான் போஸ்கோ பள்ளியிலும் , வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும் , ஜெயின் சங்கம் சார்பில் ஜெயரம்செட்டி தெருவிலும் நிரந்தர தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றது .இதே போல் அணைக்கட்டு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் , கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் , கே வி குப்பம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திலும் , குடியாத்தம் பகுதியில் சந்தைப்பேட்டை சமுதாய கூடத்திலும் , சரஸ்வதி வித்யாலயா பள்ளியிலும் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலை பள்ளி என குடியத்தில் மூன்று இடங்களிலும் , பேர்ணாம்பட்டு பகுதியில் இஸ்லாமிய உயர் நிலை பள்ளியிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த பட்டு வருகின்றது .
இந்த 11 மையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என 31 தடுப்பூசி மையங்களில் , நாள் ஒன்றுக்கு 5000 நபர்கள் என இதுவரை 2 .85 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . இது வேலூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய மொத்த மக்கள் தொகையில் 25 .55 சதவீதமாகும் .
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 755 நபர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி செழித்து கொண்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்தி 167. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை ஒரு நபர் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion