மேலும் அறிய

கடலூரில் 500-ஐ நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு.. நேற்று ஒரேநாளில் 494 பேருக்கு தொற்று..

நேற்று முன்தினம் 317 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இப்படி இருந்து வந்த சூழலில் திடீரென கொரோனா பாதிப்பு 500 ஐ நெருங்கி உள்ளது, நேற்று ஒரே நாளில் 494 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது, அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
 
இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து, நோய் பரவல் வேகமெடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 257 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பின்னர் நேற்று முன்தினம் ஒரேநாளில் 317 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இப்படி இருந்து வந்த சூழலில் திடீரென கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கி உள்ளது, நேற்று ஒரேநாளில் 494 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் வந்த 12 பேருக்கும் ஊட்டியில் இருந்து வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 62 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 419 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது வரை மாவட்டத்தில் 67 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 
நேற்று வரை 64 ஆயிரத்து 352 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். நேற்று 196 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனாவால் நேற்று புவனகிரியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார், இது வரை கொரோனாவுக்கு 878 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 1946 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தற்பொழுது சிகிச்சையில் உள்ளனர், 415 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்ட வகுப்பறைகளை மீண்டும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற முடிவு செய்து, அனைத்து அறைகளும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
 
தொடர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தும் மையத்தில் மொத்தம் 120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
 
நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், மலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும் ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பெரும்பாலானோர் கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget