மேலும் அறிய

திருவாரூர் : பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றின் காரணமாக 48 ஆயிரத்து 17 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 541 நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை சுகாதாரத் துறையினர் தகவல். 

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாடு முழுவதும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.குறிப்பாக அனைவரும் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்ததன் விளைவாக அரசின் சார்பில்  விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு பொதுமக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். 

திருவாரூர் : பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் வேகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை. நேற்று திருவாரூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நான்கு நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்படைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருவாரூர் : பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும். கட்டாயம் தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றின் காரணமாக 48 ஆயிரத்து 17 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 541 நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 472 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 16 லட்சத்து 48 ஆயிரத்து 486 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும் பதவி என்ன ?
‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு என்ன பதவி ?
Ukraine Russia India: ரஷ்யாவை துவம்சம் செய்து பெட்ரோலுக்கு கையேந்த வைத்த உக்ரைன்; புதினை காப்பாற்றுவாரா மோடி.?
ரஷ்யாவை துவம்சம் செய்து பெட்ரோலுக்கு கையேந்த வைத்த உக்ரைன்; புதினை காப்பாற்றுவாரா மோடி.?
Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும் பதவி என்ன ?
‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு என்ன பதவி ?
Ukraine Russia India: ரஷ்யாவை துவம்சம் செய்து பெட்ரோலுக்கு கையேந்த வைத்த உக்ரைன்; புதினை காப்பாற்றுவாரா மோடி.?
ரஷ்யாவை துவம்சம் செய்து பெட்ரோலுக்கு கையேந்த வைத்த உக்ரைன்; புதினை காப்பாற்றுவாரா மோடி.?
Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
TVK vs DMK: கலர் டிவி உங்க அப்பா வீட்டுப் பணத்திலா கொடுத்தது? திமுக-வுக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கலர் டிவி உங்க அப்பா வீட்டுப் பணத்திலா கொடுத்தது? திமுக-வுக்கு தவெக கேள்வி
IND vs SL 2nd Test: கோட்டைவிட்ட இந்தியா.. ஒத்த ஆளா முடித்துவிட்ட தினுஷா! ஒயிட்வாஷ் வாய்ப்பை இழந்த சுப்மன்கில் பாய்ஸ்!
IND vs SL 2nd Test: கோட்டைவிட்ட இந்தியா.. ஒத்த ஆளா முடித்துவிட்ட தினுஷா! ஒயிட்வாஷ் வாய்ப்பை இழந்த சுப்மன்கில் பாய்ஸ்!
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
மகளிர் உரிமைத் தொகை வருமா? வராதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர்!
மகளிர் உரிமைத் தொகை வருமா? வராதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர்!
Embed widget