TN on Covid Vaccination: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி - தமிழ்நாடு முதலிடம்!
தமிழ்நாட்டை அடுத்து ஆந்திராவில் 34, 228 கர்ப்பிணிகளுக்கும், ஒடிசாவில் 29,821 கர்ப்பிணிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் 21,842 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
2.27 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் 78,838 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், தமிழ்நாட்டை தொடர்ந்து, ஆந்திராவில் 34, 228 கர்ப்பிணிகளுக்கும், ஒடிசாவில் 29,821 கர்ப்பிணிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் 21,842 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் 18,423 கர்ப்பிணிகளுக்கும், கர்நாடகாவில் 16,673 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Over 2.27 lakh pregnant women have received first dose of COVID vaccine. Tamil Nadu is leading by vaccinating over 78,838 pregnant women, followed by Andhra Pradesh with 34,228, Odisha with 29,821, MP with 21,842, Kerala with 18,423 & Karnataka with 16,673 pregnant women: GoI pic.twitter.com/PkoBjgfN27
— ANI (@ANI) July 30, 2021
முன்னதாக, கர்ப்பிணி பெண்கள் ஏன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் மருத்துவர் விகே பால் கூறுகையில், “கொரோனா தொற்று பாதிப்பு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக அமைகிறது. ஏனென்றால் கரப்பிணி பெண்களின் உடல்நிலை அப்போது இயல்பை விட சற்று மாறுபடும். அத்துடன் அப்போது அது ஒரு உயிர் சம்பந்தப்பட்டது அல்ல. இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்டதாக ஆகிறது.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் வேறு சில பிரச்னைகள் வரக்கூடும். அதனால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைக்கும் பெரிய பரவும் சூழல் உருவாகும். இதன் காரணமாக கர்ப்ப காலம் முடியாமல் பாதியிலேயே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இப்படி ஒரு நிலையை தடுக்க கர்ப்பிணி பெண்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
முதலில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அப்போது அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுமா என்பது தொடர்பான ஆய்வுகள் இல்லை. தற்போது அந்த ஆய்வுகளின் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசியால் எந்தவித பிரச்னையும் வராது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது” எனக் கூறினார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. எனினும் அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளிக்கவில்லை. சமீபத்தில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )