Coronavirus LIVE Updates : தமிழகத்தில் மேலும் 2205 பேருக்கு கொரோனா தொற்று..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,590-ஆக சரிவு..
தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,590-ஆக சரிவு..
சென்னையில் இன்று 137 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது
சென்னையில் இன்று 137 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது
தமிழகத்தில் மேலும் 2205 பேருக்கு கொரோனா தொற்று..!
தமிழகத்தில் மேலும் 2205 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பாராட்டிய பிரதமர் மோடி
தமிழக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊரடங்கு அறிவிப்புகள்
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.