Sputnik Booster: புதிய கொரோனாவுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஸ்புட்னிக் அறிவிப்பு
ஸ்புட்னிக் நிறுவனத்தின், இந்த பூஸ்டர் தடுப்பூசியை கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டவர்களும் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ‘டெல்டா’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகைக்கு எதிராக ஸ்புட்னிக் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளதாக ரஷ்யாவின் கமாலேயா மையம் (Russia’s Gamaleya Research Institute of Epidemiology and Microbiology) தெரிவித்தது.
ஸ்புட்னிக் நிறுவனத்தின், இந்த பூஸ்டர் தடுப்பூசியை கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டவர்களும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
ரஷ்யாவின் கமாலேயா மையம் தயாரித்த ‘ஸ்புட்நிக்-வி’ என அழைக்கப்படும் கேம்-கோவிட்-வேக் ஒருங்கிணைந்த வெக்டர் தடுப்பூசியை (Gam-COVID-Vac combined vector vaccine), அவசரகால பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்து விற்க மத்திய அரசு முன்னதாக அனுமதி அளித்தது.
முன்னதாக, ஸ்புட்நிக்- வி தடுப்பூசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " டெல்டா எனும் மாறுபட்ட கொரோன வகை நமது பொதுவான எதிரி . நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும். ஸ்புட்னிக்- வி தான், உலகளவில் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரே ஒருங்கிணைந்த வெக்டர் தடுப்பூசி (வெக்டர் Ad26+Ad5). உருமாறிய டெல்டா வைரஸுக்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதத்தை மற்ற தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தது.
ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் 2வது மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் டிஆர்எல் நிறுவனம் மேற்கொண்டது. இந்த மருத்துவ பரிசோதனையின் தரவுகளை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), நிபுணர் குழுவுடன் இணைந்து மதிப்பீடு செய்தது. இதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவில் ஸ்புட்நிக்-வி தடுப்பூசியை டிஆர்எல் நிறுவனம் இறக்குமதி செய்து விற்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.
உருமாறிய கொரோனா:
இந்தியாவில், மகாராஷ்ராவில் இருந்து சேகரிக்கப்பட்ட கொரோனா மாதிரிகளை மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) ஆய்வு செய்தது. அவை 2020 டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன. இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது தெரிய வந்தது. இதற்கு, B 1.167 (டெல்டா) உருமாறிய கொரோனா என்று பெயரிடப்பட்டது. புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617, சர்வதேச அளவில் கவலை அளிப்பதாக (VOC) உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இதற்கிடையே, ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகை கண்டறிப்பட்டது. இதில், டெல்டா வகை வைரஸுகளில் இருந்து மரபணு ரீதியாக அதிக மாறுபாடுகளை கொண்டிருக்கிறது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest -VoI).இது கவலையளிக்க கூடியதாக (Variant of Concern - VoC) இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.
Sputnik V Vaccine : சென்னை வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!
பின்குறிப்பு:
ஸ்புட்னிக் தடுப்பூசியை 0.5 மி.லி அளவில் 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக போட வேண்டும். முதல் நாளில் 1வது கூறு தடுப்பூசியை போட வேண்டும். 21ம் நாளில் 2வது கூறு தடுப்பூசியை போட வேண்டும். இந்த தடுப்பூசிகளை -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த தடுப்பூசிகளின் முதல் கூறு மற்றும் 2ம் கூறு ஆகியவற்றை மாற்றி போட முடியாது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரூபாய் 1,145 ரூபாயும் விலை நிர்ணயம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )