மேலும் அறிய

புதுச்சேரி : 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5 பேர் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் ஒரே நாளில் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தை தாண்டி வந்தது. புதுச்சேரி அருகேயுள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தோரும் புதுச்சேரியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் 29 தாண்டியே இருந்துவந்தது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். கடந்த வாரத்துக்கு முன்பு வரை கொரோனா நோய் பாதிப்பு ஆயிரத்துக்கு  கீழ் குறைந்தே காணப்பட்டு வருகிறது. அதேபோல  பலி எண்ணிக்கையும் 20-க்கு கீழ் வந்தபடி இருந்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 355 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி : 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5 பேர் உயிரிழப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 192 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 741 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,927 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 4668 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 355 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 828 (94.38 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரி : 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5 பேர் உயிரிழப்பு..!
கொரோனா புதுச்சேரி மாநிலத்தில் 9017 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 265, காரைக்கால் – 77, ஏனாம் – 8, மாஹே – 5 பேர் என மொத்தம் 355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவை மற்றும் காரைக்காலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறையவில்லை, ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்தன. ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரத்தில் 102 பேர் வரை உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4668 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 629 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து 1,06,828 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரி : 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5 பேர் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 92.99. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்" என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது.

தலைப்பு செய்திகள்

TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget