PM Modi Chairs Covid Meeting: அதிகரிக்கும் கொரோனா... பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்! மீண்டும் ஊரடங்கா?
இந்தியாவில் ஒரே நாளில் 1.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த கூட்டம் தற்போது கூடியுள்ளது.ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3623 என அதிகரித்துள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டம் இன்று கூடியது.இந்தக் சந்திப்பு வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடந்தது.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, உள்துறை செயலர் அஜித் பல்லா, கேபினட் செயலர் ராஜீவ் கௌபா ஆகியோர் கலந்துகொண்டனர்,
இந்தியாவில் ஒரே நாளில் 1.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த கூட்டம் தற்போது கூடியுள்ளது.ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3623 என அதிகரித்துள்ளது.
Delhi: Prime Minister Narendra Modi chairs a meeting to review the COVID-19 situation in the country, through video conference pic.twitter.com/EY5u7LAaC3
— ANI (@ANI) January 9, 2022
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,59,632 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இதன் மூலம் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 10.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஓமைக்ரான் பாதிப்புகளில் 1009 பேர் மாகாராஷ்டிராவிலும் டெல்லியில் 513 பேரும் கர்நாடகாவில் 441 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு அளிக்கபட்டுள்ளதாகவும், ஜனவரி 31ஆம் தேதி வரை கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும் துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )