Intranasal Covid Vaccine: மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்த மத்திய அமைச்சர்கள்..!
மூக்குவழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அமைச்சர்கள் மான்சுக் மாண்டவியா மற்றும் ஜிகேந்திரசிங் ஆகியோர் டெல்லியில் இன்று (26/01/2023) அறிமுகம் செய்து வைத்தனர்.
Intranasal Covid Vaccine : மூக்குவழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அமைச்சர்கள் மான்சுக் மாண்டவியா மற்றும் ஜிகேந்திரசிங் ஆகியோர் டெல்லியில் இன்று (26/01/2023) அறிமுகம் செய்து வைத்தனர்.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டுள்ள இந்த மூக்கு வழி செலுத்தப்படும் மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது உலகின் முதல் இன்ட்ராநேசல் கோவிட்-19 தடுப்பு மருந்தாகும்.
Delhi | Union Health Minister Dr Mansukh Mandaviya and Science and Technology Minister Jitendra Singh launch Bharat Biotech’s nasal #COVID19 Made-in-India vaccine iNCOVACC. pic.twitter.com/cSpMIUTXsL
— ANI (@ANI) January 26, 2023
இன்ட்ராநேசல் என்பது மூக்கின் துவாரங்கள் வழியாக செலுத்தப்படும். இந்த மாத தொடக்கத்தில், பாரத் பயோடெக், iNCOVACC இன் ஹீட்டோரோலஜஸ் பூஸ்டர் டோஸ்களைப் பயன்படுத்துவதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து (CDSCO) அனுமதியைப் பெற்றது. இந்தியா முழுவதும் 9 சோதனைத் தளங்களில் 875 நோயாளிகளிடம் பூஸ்டர் டோஸ் ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகு தேசிய மருந்து ஒழுங்குமுறையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )