மேலும் அறிய

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

கொரோனா தடுப்பூசி இரண்டு   டோஸ்களையும்  செலுத்திக் கொண்டவர்களுக்கு 94 சதவீதம் பேருக்கு  தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய அபாய நிலை ஏற்படவில்லை  என்றும் 77 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் பெரும் பங்கை ஆற்றிவருவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .

 தமிழ் நாட்டில்  கொரோனா  முதல் அலை பாதிப்பைக் காட்டிலும் இரண்டாம் அலையின் பாதிப்பு  மிக வேகமாக புதிய தொற்று பாதிப்புகள் உருவாகிவந்தன  .புதிய தொற்றுகள் மட்டுமல்லாமல்  இறப்புகளும் அதிகரித்து வந்தன குறிப்பாக, இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடினர். இதற்கிடையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பதுடன் தீவிர சிகிச்சை ஐசியூ அளிக்க வேண்டிய அபாய நிலைக்கு செல்வதை தடுப்பதிலும் கொரோனா  தடுப்பூசிக்கு பெரும்பங்கு இருப்பது சிஎம்சி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மேத்யூ உள்ளிட்ட 5 மருத்துவர்கள் நடத்திய இந்த ஆய்வில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 94 சதவீதம் பேருக்கு  தீவிர சிகிச்சை  (ஐசியு) அளிக்க வேண்டிய அபாய நிலை ஏற்படவில்லை என்றும் 77 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் பெரும் பங்கை ஆற்றிவருவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .     

வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பீட்டர் ஜான்விக்டர், ஜாய் , ஹேமா பால், பிரசாத் மேத்யூ, மாலதி முருகேசன்,  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தயாரித்துள்ள ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர் .இதில்  தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி  மருத்துவமனையின் (CMC )  செய்திதொடர்பு அதிகாரி துரை ஜாஸ்பர்,  வேலூர் சிஎம்சி மருத்துவமனை 2500 கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை  கொண்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என சுமார் 10,600 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில், 8,991 பேருக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . இவர்களில் 93.4 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6.6 சதவீதம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது .

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை சுமார் 1,300 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 95 சதவீதம் பேரை தொற்றில் இருந்து பாதுகாப்பது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை பாதுகாப்பதில் 61 சதவீதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொணடவர்களை பாதுகாப்பதில் 65 சதவீத மாகவும் இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

மேலும், ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் பாதுகாப்பதில் 70 சதவீதம், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பதில் இருந்து பாதுகாப்பதில் 94 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதில் இருந்து பாதுகாப்பதில் 95 சதவீதமாக இருக்கிறது. இரண்டுடோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மருத்துவ மனைக்கு செல்லாமல் பாது காப்பதில் 77 சதவீதமும், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையை தவிர்த்ததில் 92 சதவீதமும், ஐசியு சிகிச் சையை தவிர்ப்பதில் 94 சதவீதம் பங்களிப்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் கொரோனா தடுப்பூசி தொற்றில் இருந்து பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக ஆய்வு செய்த மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget