மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 483 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88717 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 627 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 83027-ஆக அதிகரித்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1212 இருக்கிறது. இந்நிலையில் 4478 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, தேனி ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 363 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55252-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 379 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 51171-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 552 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 3529நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49540 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 263 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46046 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 528 இருக்கிறது. இந்நிலையில் 2966கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 116 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22842-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 115 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 21687-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 215-ஆக இருக்கிறது. இந்நிலையில் 940 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 133 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23871-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 148 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22256-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 366 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 1249 நபர்கள் கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator