India's Covid Case: 4 மாதங்களில் மீண்டும் உச்சம்... இந்தியாவில் ஒரேநாளில் 13,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
கடந்த 113 நாள்களில் இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேல் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 பேர் உயிரிழப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 793ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 113 நாள்களில் இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேல் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது.
4 கோடி கொரோனா பாதிப்புகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவோர் 0.16 விழுக்காடாகவும், நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் விழுக்காடு 98.63 % ஆகவும் உள்ளது. தினசரி உயிரிழப்போர் விகிதம் 1.21 விழுக்காடாக உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மே 4ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடிகளைக் கடந்தது. 2021ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி 3 கோடிகளையும், 2022 ஜனவரி 25ஆம் தேதி 4 கோடிகளையும் கடந்தது.
அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட மாநிலங்கள்
நாட்டில் இதுவரை பதிவான 5,24,840 இறப்புகளில், 1,47,883 இறப்புகள் மகாராஷ்டிராவிலும், 69,866 கேரளாவிலும், 40,112 கர்நாடகாவிலும், 38,026 தமிழ்நாட்டிலும், 26,226 டெல்லியிலும், 23,526 உத்தரபிரப் தேசத்திலும், 21,207 இறப்புகள் மேற்கு வங்காளத்திலும் பதிவாகியுள்ளன.
இதில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான உயிரிழப்புகள் இணை நோய் காரணமாக ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Highcourt Order : `இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிபெருக்கிகளுக்குத் தடை!’ : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

