மேலும் அறிய

புதுச்சேரி: 6 பேருக்கு இன்று உறுதியானது கொரோனா தொற்று..! ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா. இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 6 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 29 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 142 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 151 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 25 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 284 (98.43 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 98.43. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் எண்ணிக்கை அளவில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்கலாம். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி: 6 பேருக்கு இன்று உறுதியானது கொரோனா தொற்று..! ஒருவர் உயிரிழப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரியிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் ஜூன் மாத இறுதியில் புதுச்சேரியில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் புதுச்சேரி மற்றும் தமிழக பேருந்து சேவைக்கு வழியின்றி மக்கள் தவித்தனர். இதனிடையே தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கும் தமிழக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியிலிருந்து, தமிழக பகுதிக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Bhogi Festival History: நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Bhogi Festival History: நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Happy Pongal 2025 Wishes: குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்குமான பொங்கல் வாழ்த்து, வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என்ன  போடலாம்?
Happy Pongal 2025 Wishes: குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்குமான பொங்கல் வாழ்த்து, வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என்ன போடலாம்?
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Embed widget