மேலும் அறிய

புதுச்சேரி: 29 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா. இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 29 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 085 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 52 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 228 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 280 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 930 (98.31 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 98.31. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் எண்ணிக்கை அளவில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்கலாம். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி: 29 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரியிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் ஜூன் மாத இறுதியில் புதுச்சேரியில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் புதுச்சேரி மற்றும் தமிழக பேருந்து சேவைக்கு வழியின்றி மக்கள் தவித்தனர். இதனிடையே தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கும் தமிழக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியிலிருந்து, தமிழக பகுதிக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget