Covid 19: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று.. இன்றைய கொரோனா நிலவரம் இதுதான்..
இந்தியாவில் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருகிறது. இன்று ஜனவரி 3ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 172 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருகிறது. இன்று ஜனவரி 3ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 172 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2670 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக இருக்கிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்த புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து சர்வதேச விமானங்களிலும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்டி-பிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை சான்றிதழ வழங்க வேண்டும் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, இந்திய அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஓமிக்ரானின் BF.7 மாறுபாட்டின் காரணமாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசாங்கம் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவில் கோவிட் நோயின் நான்காவது அலை இருக்குமா என்பது குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அடுத்து வரும் 40-45 நாட்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனறும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உச்சம் பெற்று 40 நாட்களில் இந்தியாவிலும் தொற்று பரவல் கணிசமாக உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதும் இந்தியாவில் அதன் தொடர்ச்சியாக ஓரிரு வாரத்தில் தொற்று பரவத் தொடங்கும்.
சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பப்பெறப்பட்டது. இதன் காரணமாகதான், அங்கு கொரோனா அதிகரித்ததாக கூறப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )