Covid 19 3rd Wave: அக்டோபர் ஆபத்து....கொடூரமாக இருக்கும் கொரோனா 3வது அலை: மத்திய அரசுக்கு அலர்ட்!
நடப்பாண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலையால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சமடையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
National Institute of Disaster Management (NIDM), under the Ministry of Home Affairs (MHA), has warned of a third #COVID19 wave peak in October in its recent report to Prime Minister's Office (PMO).
— ANI (@ANI) August 23, 2021
நடப்பாண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலையால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன்பின்னர், கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வந்ததால், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சமடையும் என பிரதமர் அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை சமர்பித்துள்ளது.
India reports 25,072 new #COVID19 cases, 44,157 recoveries and 389 deaths in the last 24 hrs, as per Health Ministry.
— ANI (@ANI) August 23, 2021
Total cases: 3,24,49,306
Total recoveries: 3,16,80,626
Active cases: 3,33,924
Death toll: 4,34,756
Total vaccinated: 58,25,49,595 (7,95,543 in last 24 hours) pic.twitter.com/jiyOwmadnx
இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரேநாளில் 25,072 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 160 நாட்களில் இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தகக்து. நேற்று முன்தினம் 34,457, நேற்று 30,948 என பதிவான நிலையில் இன்று 25,072 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒரேநாளில் 44,157 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,36,469 இல் இருந்து 3,16,80,626 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு 3,33,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 50.75 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரேநாளில் 12,95,160 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக இந்த திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 55 மருத்துவமனை வளாகங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும். ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
Corona Third Wave: மூன்றாவது அலை... ‛ஆன் தி வே...’ -ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )