மேலும் அறிய

மயிலாடுதுறை: புதிதாக 16 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தொற்றின் எண்ணிக்கை 21,567-ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை: புதிதாக 16 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. படிப்படியாக குறையத் தொடங்கியது. இன்றுமட்டும் 16 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட 7 பேருக்கு குறைவாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 567 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 21 ஆயிரத்து 22 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 16 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 34 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 274-ஆக தொடர்கிறது.

மயிலாடுதுறை: புதிதாக 16 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று..!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

ஒருகிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 85 ஆயிரத்து 930 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 22 ஆயிரத்து 813 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 63 ஆயிரத்து 117 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 52 ஆயிரத்து 7 பேருக்கு கோவிஷீல்ட் 4 லட்சத்து 33 ஆயிரத்து 923 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி  தொடரப்பட்டுள்ளது என்றும். இன்று மட்டும் 4321 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 481 ஆண்களுக்கும், 2 லட்சத்து 50 ஆயிரத்து 377 பெண்களுக்கும், திருநங்கைகள் 72 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Embed widget