கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்றைய கொரோனா நிலவரம்
இன்று ஒரே நாளில் 11 இடங்களில் 4950 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாமும் நடைபெற்றுள்ளது.
கரூரில் இன்று புதிதாக தொற்று பாதித்தவர்கள் 15 நபர்கள். இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 23002 ஆக உள்ளது. இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 16, இதனால் கரூர் மாவட்டத்தில் 22464 நபர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததவர்கள் யாரும் இல்லை. இதனால் இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 351 உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று வரை 187 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 இடங்களில் 4950 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாமும் நடைபெற்றுள்ளது. அதேபோல் நாளை கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட உள்ளதா என இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொற்று நிலவரத்தை தற்போது காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தொற்று பாதித்தவர்கள் 47 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 48379 நபர்கள் தொற்று பாதிப்பு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து 41 நபர்கள் வீடு திரும்பி உள்ளனர் . இதனால் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47387 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தவர் எண்ணிக்கை 465 ஆக உள்ளது. தற்போது நாமக்கல் மருத்துவமனையில் 527 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று பத்துக்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் பகுதியில் உள்ள பஞ்சாயத்துகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்று உள்ளது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரத்தியேகமாக சிறப்பு முகாம் திறக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே வரும் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் சற்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேருக்கு கொரோனா உறுதி. 1,827 பேர் குணமடைந்த நிலையில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )