கரூரில் இன்று புதிதாக 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு, நாமக்கல்லில் 47 நபர்களுக்கு தொற்று..!
தொடர்ந்து 4 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் இன்று 17 இடங்களில் 6800 தடுப்பூசிகள் போடப்பட்டன. நான்கு நாட்களாக தடுப்பூசி இல்லாத நிலையில் சிறப்பு முகாமில் மக்கள் கூட்டம் அலை மோதின.
கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,866-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22324-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 இருக்கிறது. இந்நிலையில் 191 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் இன்று 17 இடங்களில் 6800 தடுப்பூசிகள் போடப்பட்டன. நான்கு நாட்களாக தடுப்பூசி இல்லாத நிலையில் இன்று போடப்பட்ட சிறப்பு முகாமில் மக்கள் கூட்டம் அலை மோதின. பின்னர் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது, அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டனர். நாளை தடுப்பூசி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியில் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
நாமக்கல்லில் கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 47 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47884 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 73 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46874-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 460-ஆக இருக்கிறது. இந்நிலையில் 550 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சிறப்பு மையங்கள் மூலம் போடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை இரண்டு நாட்களாக தொட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கரூரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு மாவட்ட மக்களும் சற்று நிம்மதியில் உள்ளனர்.