தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா உறுதி: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவானது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 18ம் தேதி 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 82 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தொடர் இருமல் காய்ச்சல் உள்ளிட்டவைகள் இருந்த காரணத்தினால் கல்லூரியில் பயிலும் 750 மாணவர்களில 200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கல்லூரி விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )